பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

அதியன் விண்ணத்தனார்

“இரங்கு முரசின் இனஞ்சால் யானை
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னும் ஒர்யான் அவரவறி யேனே;
நீயே, முன்யான் அறியு மோனே
........................................
நாஞ்சிற் பொருந!
சிறுவெள் அருவிப் பெருங்கல் நாடனை
நீ வாழியர்! நின் தந்தை

தாய்வா ழியர்!நிற் பயந்திசி னோரே.” (புறம்: ௧௩௭)

வேந்தர்க்கு உற்றுழி உதவப் பிரிந்த தலைமகன், அத்தொழில் நெடுங்காலம் கழித்தே முடிந்தமை கருதி வருங்தியக்கால், “தலைவ! வேந்தன், விரைவில் விடை தாராது, நேற்றிரவு அன்றோ வினைமுடித்து விடைதந்தான் என வருந்தற்க! தலைவி இருந்த ஊர் மிகமிக அணித்தே உளது” “புரவிற்று அம்ம! நீ நயந்தோள் ஊரே; எல்லி விட்டன்று வேந்து எனச் சொல்லுபு பாரியல்” (நற்: ௧௨௧) என்று கூறித் தேற்றினான் பாகன் எனவும், தலைவன் தோளிற் பாய்ந்து துயர்செய்து மீண்ட தலைவியின் கண்கள், கானவர் கலைமேல் எய்து கொன்று எடுத்த கறைதோய்ந்த அம்புபோலும் “கலைநிறத்து அழுத்திக் குருதியொடு பறித்த செங்கோல் வாளி மாறு கொண்டன்ன உண்கண்” (குறுந் : ௨௭௨) எனவும் கூறியுள்ளமை அவர் புலமைக்கொரு அழகாம்.