பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

அதியன் விண்ணத்தனார்


அவர் உயிரைப் போக்கி, அவர் உடலையாவது பற்றிக் கொணர்தல் வேண்டும்; அவ்வாறு செய்யாமை அவர்கள் செய்த பெரும்பிழை. இப்பெரும்பிழை போகவேண்டின் யானையின் பெரிய கொம்புகளையும், புலியின் தோலையும். தண்டமாகத் தனக்கு அவர்கள் தருதல் வேண்டும் என ஆணையிட்டு அவ்வாறே பெறவும் செய்தான். இத்தகைய அறனிலான் ஒருவனைப் புலவர் நமக்கு அறிமுகமாக்கி, அவன்தன் அறனில் செயலைப் பழித்துள்ளமை உணர்க.

‘’வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்,
கைப்பொருள் இல்லை யாயினும், மெய்க்கொண்டு
இன்னுயிர் செகாஅர் விட்டகல் தப்பற்குப்
பெருங்களிற்று மருப்பொடு, வரியதள் இறுக்கும்
அறனில் வேந்தன் ஆளும்
வறனுறு குன்றம்.” (அகம்: க௦௯)

ஆறலே கள்வரை ஆணைகொள்ளும் அவ்வரசனே ‘’அறனில் வேந்தன்‘’ எனப் பெயரிட்டுப் பழித்த புலவர், அவன், அத்துணைக் கொடியனானமைக்கு, அவன் ஆளும் நாட்டின் வளம் இன்மையே காரணமாம்; அவன் நாட்டு வறுமையின் கொடுமை, அவனே அத்துணைக் கொடியனாக்கி விட்டது; அவன் மட்டும் அல்லன் ; வறுமை மிக்க நாட்டில் வாழ்வார் அனைவருமே, அவனைப்போல் கொடியராய். மாறுவர்; ஆகவே, குறைகூற வேண்டுவது அவனை யன்று; அவன் நாட்டில் நிலவும் வறுமையினையே எனக் கூறிப் பொருள் இலக்கணம் குறித்த புதுப்பொருள் கண்டுளார் புலவர்.

‘’அறனில் வேந்தன் ஆளும்

வறன் உறு குன்றம்."