பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடுவன் இளவெயினனார்

148


இவ்வாறு வெம்மை நீக்கப்பெற்ற அக்கருவை, அருந்ததி யொழிந்த எனையோராகிய கார்த்திகைப் பெண்கள் அறுவரும் உண்டு, கருப்பம்கொண்டு, சரவணப்பொய்கையில், தாமரைப்பாயற்கண்ணே பயந்தனர்; அவ் ஆறு குழந்தைகளே ஒருருவாய் வந்த முருகனாவன் என்றும் கூறியுள்ளார்.

வெம்மையிற் சிறந்தது ஞாயிறு தண்மையிற் சிறந்தது திங்கள்; வண்மையிற் சிறந்தது மாரி; பொறுமையாய்த் தாங்கிப் புரத்தலிற் சிறந்தது பூமி; மணத்திற் சிறந்தது மலர் என்ற கருத்தினேப் புலவர் அழகாக எடுத்துக் கூறியுள்ளார். திருமாலுக்குரிய அப்பண்புகள், அப் பொருள்கள் வ்ழியே வெளிப்பட்டுத்தோன்றும் எனக்கூறிய திறம் வியந்து பாராட்டத்தக்கதாம்.

"நின், வெம்மையும், விளக்கமும் ஞாயிற்றுள;
நின், தண்மையும், சாயலும் திங்களுள;
நின், சுரத்தலும், வண்மையும் மாரியுள
நின், புரத்தலும், நோன்மையும் ஞாலத்துள;
நின், நாற்றமும், ஒண்மையும் பூவை உள.‘’
(பரிபாடல் : ௪ : உ௫-உ௪)

திருமால், அறமாகிய கோலால் தாங்கப்பெறும் அருளாகிய குடை, நிழல் செய்ய நிலவுலகைக் காத்தான் எனக் கூறுமுகத்தான், நாடுகாவல் கொண்டொழுகும் அரசராவார், அறமும் அருளும் துணைகொண்டு ஆளுதல் வேண்டும் என்ற அரசியல் அறிவினை அளித்துள்ளார்:

‘’அருள் குடையாக, அறம் கோலாக
இருநிழல் படாமை மூவேழ் உலகமும்
ஒருநிழல் ஆக்கிய" (பரிபாடல் :௩:௭௪:௭சு)

"இறைவா! நின்னைப் பணிகின்றேன் : பரவுகின்றேன்; வணங்குகின்றேன் ; வாழ்த்துகின்றேன்; எனக்குப் பொன் தா , பொருள் தா ; போகம் தா" என வேண்டும்