பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௶. கண்ணகாரன் கொற்றனார்

கொற்றனார் என்பது இவரது இயற்பெயர்: இவர் பெயர்க்குமுன் வந்துள கண்ணகாரன் என்பதன் பொருள் விளங்கவில்லை. தாயன்பு புலப்பட இவர் பாடிய பாட் டொன்று நற்றினைப் பாக்களுள் சேர்க்கப்பட்டுளது.

அன்பில் தாயன்பே தனிச்சிறப்புடையது : இறைவன் உயிர்கள் மாட்டுக் கொள்ளும் அன்பும், தாயன்பிற் குறையுடையதே. 'பால் நினைந்து ஊட்டும் தாயினும் பரிந்து' என்ற மணிவாசகப் பெருந்தகையாரின் மணிமொழியினைக் காண்க. தன் மகள், தான் விரும்பிய ஒர் ஆண்மகனோடு. அவனூர் சென்றுவிட்டாள் என்பதை அறிந்தாள் ஒரு தாய் : ‘’உற்றார்க்கு உரியர் பொற்றொடி மகளிர்‘’ என்பதை உணர்ந்தவளாதலின், தன் மகள், தக்கான் ஒருவனுடன் சென்ற செயல் தக்கதே எனும் கருத்துடையளாயினும், அன்புகாட்டி வளர்த்த அவள் பிரிவு, அவள் உள்ளத்தே உறுதுயர் விளைத்தது மணல் பரந்து அழகு மிக்குத் தோன்றும் தன் மாளிகை முற்றத்தே, தன். மகளோடு ஆடி மகிழும் மகளிரையும், அவர்கூடி ஆடிய கொச்சி வேலிசூழ் இடத்தையும், அவள் வளர்த்த கிளி, அவளைப் பலகால் அழைத்து அழைத்தும் அவளைக் காண மாட்டாமையால் கலங்கி நிற்கும் காட்சியையும் காணுந்தொறும் காணுந்தொறும், கழிபெரும் துயர்கொண்டாள்: எனினும், அங்நிலையிலும், பிரிந்த அவள்மாட்டு அவட்குச் சினம்பிறக்கவில்லை; அவள் செயல் அவட்குப் பிழையுடைய தாகத் தோன்றவில்லை: அவள் பிரிவிற்கும், அவள் பிரிவால் உண்டாம் துயர்க்கும் தானே காரணமாம் என்றே எண்ணினாள் தன்துயர் பொறாது, தன்னருகிருந்து ஆறுதல் கூறுவார்பால், 'இவ்வாறு யான் வருந்தப் பிரிந்து சென்ற என் மகள் குற்றமுடையாளல்லள்; அவள் கொண்ட காமமோ மிகமிக அருமையும், பெருமையும் உடையது: நின்மகள் அயலான் ஒருவன்பால் அன்புடையள் என்று ஊர்ப்பெண்டிர் ஓயாது வந்து கூறுவன கேட்