பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகாரன் கொற்றனார்

151


டேன். தகுதியுடையர்ன்பால் அன்புகொண்டு வாழ்வதே அறநெறியாம்: அக்நிலையினை என்மகளும் அடைந்துவிட்டாள் என்பதை அவர் உரை அறிவித்தலான், ஒருபால் இன்பம் நிறைந்ததாகத் தோன்றினும், அவர் ஓயாது கூறுவதும், கூறும் முறையும் துயர் தருவவாயின. அவர் கூறுவன கேட்ட பின்னரும் சிலநாள் அளவும், அவள் களவொழுக்கத்தினை அறியாதேன்போல் இருந்தேன்; மீண்டும் அலர் மிக எழுதல் அஞ்சி, ஒரோவொருகால், அவள் களவொழுக்கத்தை யான் அறிந்துளேன் என்பதை அவட்குக் காட்டும் முகத்தான், "மகளே ! நின்கூந்தல் பண்டு போலாது புதுமணம் கமழக் காரணம் என்னையோ?” என்று வினாவினேன்; தன் ஒழுக்கத்தினே யானும் அறிந்து கொண்டேன் என்பதைக் கண்டு நாணியே அவள் பிரிந்து விட்டாள்; ஆகவே, யானே தவறுடையேன்,” என்று கூறினாள்; அத் தாயின் அறிவும், அன்பும் என்னே!

கடனறி தாயின் அறிவும், அன்பும் புலப்படப் பாடிப் பொன்றாத் துணை புரிந்த புலவர் தம் பெருமையே பெருமை !

"ஜதே காமம் யானே; ஒய்யெனத்
சருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து
ஓரை ஆயமும் நொச்சியும் காண்டொறும்
நீர்வார் கண்ணேன் கலுழும் என்னினும்
கிள்ளையும் கிளைஎனக் கூஉம்; இளையோள்
வழுவிலள் அம்ம தானே குழீஇ
அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்
இன்னா இன்னுரை கேட்ட சின்னாள்
அறியேன் போல உயிரேன்;
நறிய நாறும்நின் கதுப்புஎன் றேனே." (நற் : ௧௪௩.)