பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணங்கொற்றனார்

153

தாரப் பாடி, அவனோடு கூடிமகிழ்தற்கு ஏற்ற வாய்ப்பு வந்துற்றது என எண்ணி, இன்ப வெள்ளத்துள் திளைத்தாள்; அந்நிலையில் ஆண்டுவந்த அவனிடம் எல்லாவற்றையும் எடுத்துக்கூறி, இனி எம் தினைப்புனத்திற்கே வருக! இரவுக் காலத்தில் வருதல் வேண்டுவ தின்று; பகற்காலத்திலேயே வருக! என வேண்டிநின்றாள் என்று கூறி, அவள் அன்பை நாம் அறியச் செய்துள்ளார் புலவர்.

“நீயே, அடி அறிந்து ஒதுங்கா ஆரிருள் வந்துஎம்
சுடியுடை வியனகர்க் காவல் நீவியும் ,
பேரன் பினையே; பெருங்கல் நாட!
யாமே, நின்னும் நின்மலையும் பாடிப் பன்னாள்
சிறுதினை காக்குவம் சேறும்; அதனால்,
பகல்வந் தீமோ பல்படர் அகல;
எருவை நீடிய பெருவரைச் சிறுகுடி
அரியல் ஆர்ந்தவ ராயினும், பெரியர்;
பாடிமிழ் விடர் முகை முழங்க
ஆடுமழை இறுத்ததுஎம் கோடுயர் குன்றே.”

                                                                     (நற்: ௧௫௬)