பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



டுக. காசிபன்கீரனார்

கீரனார் என்ற பெயர் பழங்காலப் புலவர் பெரும்க்கள் பலராலும் விரும்பி மேற்கொள்ளப்பட்ட பெயராம். அப்பெயருடைய இவர், காசிபன் என்பார்க்கு மகளுகவோ, அல்லது காசிபகுடி என்ற குடியிற் பிறந்தமையாலோ காசிபன் கீரனார் என அழைக்கப்பெற்றுளார்; அந்தணர்க்கு உரிய குடிகளுள் காசிபகுடியும் ஒன்று ஆதலின், இவர் அந்தணராவர். இவர் பாடிய பாக்களுள் ஒன்றே. நமக்குக் கிடைத்துளது. அது நற்றினைக்கண் இடம் பெற்றுளது.

பொருள்கருதிப் பிரிந்து சென்ற தலைமகன், பெரு மழைபெய்ய, முல்லை மலர்ந்து மணங்கமழும் கார்ப்பருவத் தொடக்கத்தே நில்லாது மீள்வன் என வற்புறுத்திச் சென்றிருந்தான் அக்காலம் வந்தவுடன், அவனும் வந்து விடுவன் என்ற எண்ணத்தால், அவன் பிரிவாலாய துயரைப் பொறுத்திருந்தாள்: கார்ப்பருவம் தொடங்கிவிட்டது; இடியொலிக்க எழும் மேகங்களைக் கண்டு, மயில்களும் மகிழ்ந்து ஆடலாயின; அதைக் கண்ணுற்ற தலைமகள், அவர் குறித்துச்சென்ற பருவம் வந்ததாகவும், அவர் வந்திலரே என வருந்தினாள்; அவள் துயர் பெருகிற்று; அவளை அங்நிலைக்கண் கண்ட தோழி, அவளைத் தேற்றுவான் வேண்டினாள்; அவன் வாராமையால் வருந்தும் அவட்கு எதைக்கூறினும் அவள் துயர் குறையாது என்பதை அறிவாள் அவள்; அவன் குறித்தகாலத்தே வருவன் ஆனால், அவன் குறித்தகாலம் இன்னமும் வந்திலது என்பதை அறிந்தாலல்லது அவள் துயர் குறையாது; ஆனால், அக்காலமோ வந்துவிட்டது: இங்நிலையில் பொய்கூறுவது தவிர வேறுவழி அவட்குத் தோன்றிற்றில்லை; 'பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்' என்ற பொருளுரை உணர்ந்தவ்வ'ளாதலின் துணிந்து ஒரு பொய் கூறினாள்; இது கார்ப்பருவமன்று எனக்கூறினாள் கூறிய அவள், அதை அவட்கு. நேரே கூறினாளல்லள்: மேகத்தை விளித்தாள், "இவள்,