பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

அதியன் விண்ணத்தனார்


பிரிவுத்துயர் கண்டு மகிழ எண்ணிய நீ இடியொலி செய்கின்றனை; பிறர் துயர்கண்டு மகிழ எண்ணும் நின்பால் அன்பு அறவே இல்லைபோலும், நின் இடியொலி, கால, மல்லாக் காலத்தே எழுந்துளது அவ்வாறு எழுந்த ஒலி, இவள் துயர்கண்டு மகிழ எண்ணும் நின் வேட்கையால் உண்டாயது என்பதை அறியாத மயிலினங்கள், கார் காலத்து ஒலியே என மயங்கி மகிழ்கின்றன; அம்மயில்போல், மயங்கும் மதியில்லேனல்லன் யானும்; நின் இடியொலி காலமல்லாக்காலத்து எழும் ஒலி என்பதை அறிவேன்; ஆகவே, அவர் வாராமை குறித்து வருந்தேன்' எனக் கூறினாள்; மேகத்தை நோக்கிக் கூறினாளேனும், அது, தலைவி செவியுறுமாறு செப்பிய சொற்களேயாம். அதைக்கேட்ட தலைவியும், துயர் ஒழிந்து மகிழ்வள் என்ற வேட்கையே, அவள் அவ்வாறு கூறுதற்குக் காரணம்; மயில்கள் அறியாது மகிழ்கின்றன எனக்கூறியது, மயில்கள் தாம் அறிவு அற்றவையாதலின், உண்மை உணர மாட்டாமல் மகிழ்கின்றன; தலைவன் அன்புடைமையும், கூறியன பிழையா ஒழுக்க முடைமையும் உணர்ந்த ,நி அவன் வாரர்முன் இடிக்கும் இம்மேகத்தின்செயல், இயற் கையொடு பொருந்தாது எனக் கொள்ளாது இது கார்காலமே எனக்கொண்டு கலங்குவது அறிவுடைமையாகுமா? எனத் தலைவியைக் குறிப்பால் இடித்துரைத்தற்காம். இத்தனை அறிவுடையவள் தோழி என்பதைத் தம் புலமைச் சிறப்பால் புலப்படுத்திப் பாடியுள்ளார். புலவர்.

"சிறுவி முல்லைத் தேங்கமழ் பசுவி -
பொறிவரி நன்மான் புகர்முகம் கடுப்பத்
தண்புதல் அணிபெற மலர வண்பெயல்
கார்வரு பருவம் என்றனர்மன்; இனிப்.
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்
அன்பு இன்மையின் பண்பில பயிற்றும்
பொய் இடி அதிர்குரல் வாய்செத்து ஆலும்
இனமயில் மடக்கணம் போல
நினைமருள் வேனே வாழியர் மழையே!” (நற்;உசவ)