பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுo. காப்பியஞ் சேந்தனுர்


சேந்தன் என்பது இவர் இயற்பெயர்; இவர், காப்பியம் என்ற ஊரிற் பிறந்தமையாலோ, காப்பியம் என்ற குடியிற் பிறந்தமையாலோ, காப்பியன் என்பார்க்கு மகனாய்ப் பிறந்தமையாலோ, காப்பியஞ் சேந்தனர் என அழைக்கப் பெற்றுளார். இவர் பாடிய பாட்டொன்று நற்றிணைக்கண் இடம்பெற்றுளது. .

தம்காலத்தே தமிழகத்தே வாழ்ந்த மகளிர், தம் கணவர் மாட்டுப் பெரிதும் நம்பிக்கையுடையவராவர் என்பதை மிகவும் நமாக எடுத்துக் கூறியுள்ளார். பொருள் தேடிச்செல்லும் தலைவன், கடத்தற்கரிய வழிகள் பல வற்றைக் கடந்து சேணாடு சென்றிருப்பினும் தான் இன்ன காலத்தே வருவேன் எனக் கூறிச்சென்ற காலத்தே தவறாது வந்துசேருவன்; காரணம் தலைவன் பொய்கூறி அறியான் என்று கூறினாள் ஒரு பெண் எனப்பாடி அக்கால மகளிர்தம் மாண்பினைப்புலப்படுத்தியுள்ளமையுணர்க.

"உரம்புரி உள்ளமொடு சுரம்பல நீந்திச்
செய்பொருட்கு அகன்றனராயினும், பொய்யலர்
வருவர். (நற் : உசசு)

நிமித்திம் காணல் பண்டுதொட்டே இருந்துவரும் ஒரு பெருவழக்காம்; தம்மைச் சூழ நிகழும் நிகழ்ச்சிகளையும், எழும்சொற்களயும், தம் உள்ளத்தெழும் எண்ணங்களுக்கேற்பத் தொடர்புபடுத்திக் காணல் மக்கள் தம் மன இயல்பு; பல்லி ஒலிப்பது எப்போதும் நிகழ்கிறது ஆயினும், அதன் ஒலி குறித்து எழும் எண்ணம் மக்கள் உள்ளத்தே எப்போதும் எழுதில் இல்லை; மக்கள் ஒரு நிகழ்ச்சியை எதிர்நோக்கியிருந்து, அதுபற்றிய சிந்தனையில் மூழ்கியிருப்புழியே, பல்லிசொல்லில் பயன்காண எண்ணுவர்; தலைவர் வருவர் என நாமும் எண்ணினோம், பல்லியும் ஒலித்தது எனக் கூறினாள் தோழி என அவர் கூறுவது காண்க.

இடுஉ ஊங்கண் இனிய படுஉம்
கெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும். (கம் : உசக)