பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சு.க. காமக்கணி நப்பாலத்தனார்

பாலத்தனார் என்பது இவர் இயற்பெயர்: சிறப்புக் குறித்துவந்த ஓர் இடைச்சொல்; இவர் காமக்கணியாரின் மகளுர், காமக்கணி என்பது, காமாட்சி என்ற வட சொல்லின் தமிழ் வடிவம்; காமக்கண்ணி என்பதன் சுருக்கம் காமாட்சி என்ற பெயர், ஆண்பால், பெண்பால் ஆய இருபாலார்க்கும், இக்காலத்தே ஒப்பவழங்கப் பெறுதலேபோல், காமக்கணி என்பதும் இருபாற்கும் வரும் என்ப. இனி, காமக்கணி எனவும், காமக்கண்ணி: எனவும்வரும் இவை, காமக்கணி என்று வருதல் வேண்டும்; இம்மை, மறுமை ஆய இருமையிலும் இன்ப வாழ்வினராதல்வேண்டி மேற்கொள்ளும் காமியம் எனப் பெயர்பெறும் வேள்வி காமம் எனவும் வழங்கப்பெறும்; அத்தகைய வேள்விகளை முன்னின்று முடித்துத் தரும் வேள்வியாசிரியர்கட்கு அளிக்கும் சிறப்பு, காமக்காணி' எனப்படும். இத்தகைய காமக்காணிகள் சங்ககாலத்திலும் பலர் இருந்தனர்; ஆகவே, இவர், காமியவேள்வி செய்யும் வேள்வியாசிரியர் வழிவந்தவராவர் என்று கூறுவர் மற்றும் சிலர். இவர் பாடிய பாட்டொன்று அகநானூற்றில் மணிமிடைபவளத்தில் இடம் பெற்றுளது.

மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனர் என்ற புலவர் ஒருவரும் உளராதலின், அவரின் இவரைப் பிரித்து அறிதற்கு, இவரை, மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் என அழைத்தனர் அக்கால மக்கள்.

இவர் பெயர் அறியாப் பாண்டியன் ஒருவனையும், வளம்மிக்க சிற்றுார்த்தலைவனாய வாணன் என்பானையும் பாராட்டுகிறார். பாண்டியன், இவ்வுலகெலாம் தன் ஒரு குடைக்கீழ்வைத்து ஆண்டவன்; போரில் பகைவரால் தொலைத்தற்கு அரியவன்; கடல்போல் பரந்த பெரிய படையுடையவன்; களத்தே செருக்கித்திரியும் குதிரை உடையவன், அவன் வென்று தங்கும் பாசறை பலவாம்; இவ்வாறு பாராட்டுவர் பாண்டியனை