பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமக்கணி நப்பாலத்தனார்

177



'உலகுடன் நிழற்றிய தொலையா வெண்குடைக்
கடல்பேோல் தானைக், கலிமா, வழுதி
வென்று அமர் உழந்த வியன்பெரும் பாசறை.'

(அகம் : உ0க)

வாணன் என்பான் ஒருவனேப் புலவர் பலரும் பாராட்டுகின்றனர்; அவனைப் பாராட்டும் புலவர் எல்லாம் வளம் நிறைந்த அவன் சிறுகுடிச் சிறப்பினையே பாடுகின்றனர். கரைக்கண் நின்ற மரத்தினின்றும் வீழ்ந்த மாங்கனியை யாமைகள் கவரும் பொய்கைகள் பல சூழக் கொண்ட சிறுகுடி என்று சிறப்பிக்கின்றார் ஒரு புலவர். மருதன் இளநாகனார், கடற்கரைச் சோலைகளைச் சார்ந்தது, நெல்விளையும் நன்செய்களை உடையது அவன் சிறுகுடி என்று கூறுகிறார்; இவ்வாறு புலவர்கள் எல்லாம் அவன் கொற்றமோ, கொடையோ தோன்றப் பாடாமல், அவன் வளமே தோன்றப் பாடுவதைக் கண்ட நம் புலவரும், வயலில் வெண்ணெல் அரிவோர் முழக்கும் தண்ணுமை ஒலிகேட்டுப், பொய்கைக்கண் இருக்கும் புள்ளினங்கள் பறந்து ஓடும் அவன் சிறுகுடி, விளைந்த நெற்பயிர்களை உடையது அவன் சிறுகுடி என அவன் வளத்தையே பாராட்டியுள்ளார்

"வெண்னெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை
பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஒப்பும்
காய்நெல் படப்பை வாணன் சிறுகுடி.

(அகம் : உலச)