பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சுஉ. காமஞ்சேர் குளத்தார்

இவர்க்கு இப்பெயர் உண்டாதற்காம் காரணம் இஃது எனத் துணிந்து கொள்வதற்கில்லே. மகளிர், இம்மையில், தம் வாழ்நாள் உள்ளளவும், தம் கணவரோடு பிரிவின்றி வாழ்ந்து இடையறா இன்பம் பெறவும், மறுமையில் போக பூமியிற் சென்று பிறந்து ஆண்டும் அவரோடு பிரிவின்றிப் பெருவாழ்வு வாழவும் வேண்டி, சோமகுண்டம், சூரிய குண்டம் என்ற பெயருடைக் குளங்களில் மூழ்கிக் காமவேளை வழிபடுவர் என்ப :

"கடலொடு காவிரி சென்றலேக்கும் முன்றில்
மடலவிழ் நெய்தலங் கானல் தடமுள
சோமகுண்டம், சூரியகுண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு
தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப் பிறப்பர்.'

(சிலம்பு : க : இள சுட)


என அவ்விரு குளங்களின் இயல்பினை இனிதெடுத்துக் கூறியுள்ளார் இளங்கோவடிகளார். அக்குளங்கள், காமக்குளம் எனும் பெயராலும் வழங்கப்பட்டுளது. கடியலூர் உருத்திரங்கண்ணனார் அவற்றை 'இருகாமத்து இணைஎரி” பட்டினப் : க.க) எனப் பெயரிட்டு வழங்குவது காண்க. இதனால் காமவேள் கோட்டங்கள் உளவாலைப் போன்றே, காமம்சேர் குளங்கள் உளவாதலும், அக்குளங்களுக் குண்டான சிறப்பால், அவையிருந்த ஊர், தன் பழம் பெயர் இழந்து, அக் குளங்களின் பெயரையே தாமும் பெற்றுவிடுதலும் உண்டு எனத் துணியலாம். ஆகவே, காமம்சேர் குளம் என்பது ஒர் ஊர்ப்பெயர்: புலவர் அவ்வூரிற்பிறந்து வாழ்ந்தமையான், இவர்க்கும் அப்பெயர் உண்டாகிவிட்டது எனக் கொள்ளுதல் கூடும். ஆசிரியர் இளங்கோவடிகள், அக் குளங்கள் சோணாட்டில் புகாரை அடுத்து, காவிரி கடலோடு கலக்குமிடத்தே உள என்ப. சிலம்பு கூறும்