பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமஞ்சேர் குளத்தார்.

179



அக்குளங்கள் இரண்டும் திருவெண்காட்டில் உள்ள சோம தீர்த்தமும், சூரிய தீர்த்தமுமாம் எனச் சிலர் கொள்வர். இதனால் காமஞ்சேர். குளம் எனும் பெயருடையதொரு ஊர் யாண்டிருந்தது என்பதைத் துணிந்துகொள்வதற்கில்லை. புலவர் பெயர், சில ஏடுகளில் காமம் சொகினத்தார் எனவும் காணப்படுகிறது. இவர் பாடிய பாட்டாக நமக்குக் கிடைத்துளது எட்டுத்தொகை நூல்களுள், இரண்டாவதாக வைத்து எண்ணப்படும் நல்ல குறுந்தொகைக்கண் இடம்பெற்றுளதொரு செய்யுள் மட்டுமே,

உள்ளமும், உடலும் உறவுடையன; அகமே புறம்: உள்ளக்கவலையால் உண்டாம் வெப்பம், உடலையே அழிக்க வல்லதாம். உள்ளக்கலையால் உடற்கு ஊறுநேர்ந்தக் கால், அவ்வுள்ளக்கவலைகளை ஒழிதற்காம் வகையறிந்து அது செய்து போக்க எண்ணாது, உடற்கு மருந்தளித்துப் போக்க எண்ணுதல் அறிவுடைமையன்று; உள்ளமே உடல்; "உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின். வாக்கினிலே ஒளியுண்டாகும்’ என்ப. உள்ளத்தே துள்ளும் உவகை உண்டாயின், உடலும் வனப்புற்று, வளம் பெற்று விளங்கும். ஆண்டு அமைதி குன்றின் உடலும், ஆற்றலும் அழகும் இழந்து அழியும். உடற்கும் உள்ளத்திற்கும் இடையே உண்டாம் இவ்வுறவினை உணர்ந்தவர் நம் புலவா்.

தலைவன் அருகிருந்து அன்புரை வழங்குவதொழிந்து பிரிந்து சென்றமையால் பெரிதும் வருந்தினாள் ஒரு தலைவி. அவன் அளிக்கும் அன்பு வாழ்க்கையினைப் பெறமாட்டாத அவள் உள்ளம், பெரிதும் வருந்திற்று. வருத்தம் மிக்க இடத்தே வெப்பம் இடம் பெறுதல் இயல்பு. அவள் உள்ளம் வெந்து நொந்தது. அகத்தே அவ்வுள்ளம் உற்ற வெப்பம், அவள் கண்வழியே புறம் போந்து புலப்படலாயிற்று. பிரிவெண்ணி வருந்தும் அவள் கண்ணினின்றும் பெருகிய நீர், அக்கண்களின் இமைகளையே எரித்து அழிக்க வல்ல அத்துனை வெம்மையுடையதாயிற்று. அதனால் அவள் அழகும் குன்றிற்று குன்றிய அவள் அழகு கண்டு