பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



௪௩ காவட்டனார்

இவர்க்கு, இப்பெயர் வருதற்காம் காரணம் விளங்க வில்லை; இப்பெயர் கானட்டனார் எனவும் வழங்கும். பன்னிரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள், கோவில் பட்டர்களிடையே, காவிட்டன் என்ற பெயர் பயில வழங்கியிருந்தது என அறிவிப்பது கொண்டு, முதல் நூற்றாண்டுப் புலவராகிய இவர் பெயரும் காவிட்டனார் என்பதே எனக் கோடல், ஆராய்ச்சி நெறியோடு அமைதியுடையதாகத் தோன்றவில்லை. இவராற் பாராட்டப்பெற்றேன், அந்துவன் கீரன் எனும் பெயருடையானொரு படைமறவனாவன்.

அந்துவன் கீரன், அந்துவன் என்பாற்கு மகனாய்க் கீரன் எனும் இயற்பெயருடையனாவன். அந்துவன் கீரன், அக்காலப் பேரரசர்களைப் போன்றே, அரும்பொருளும் பெரும்படையும் உடையனாயினும், இம்மையிற் புகழும், மறுமையில் இன்பமும் எய்துவிக்கும் அறவுணர்வு அற்றவனாயினன். அந்துவன் கீரன்பால் பேரன்புடையராய புலவர்க்கு அவனை நன்னிலைக்கண் நிறுத்தல் வேண்டும் எனும் வேட்கை உண்டாயிற்று.

மக்கள் அனைவரும் அழியாப் பெருவாழ்வு பெற்று வாழவே எண்ணுவர்; அத்தகையார் வாழும் இடம் நிலையற்றது; தம் வளத்தை அழிக்கவல்லது என அறிந்த அக்கணமே, அவ்விடத்தைவிட்டு அகல்வர் தம் வாழ்வும், வளமும் வற்றாது நிற்றற்காம் இடம் தேடிப்போதற்கு அவர் சிறிதும் பின்னிடார்; அதற்கு மாறாக, வாழும் இடம், அழிக்கலாகா அரண் உடையது என எண்ணுவராயின், அவ்விடத்தினைவிட்டு அகலவும் எண்ணார்; அகல எண்ணாமையோடு ஆங்கேயே ஆண்டுபல வாழ்தற்காம் வழிவகைகளையும் தேடி அலைவர். இது, மக்கள் இயல்பு.

இவ்வுலகமோ நிலையற்றது; ஆயினும் அது நிலையற்றது என்ற எண்ணம் வரப்பெற்றார் உலகத்தில் மிகமிகச் சிலராவர். நில்லாதவற்றை நிலையின என உணரும்