பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

அதியன் விண்ணத்தனார்


புல்லறிவாளரே மிகப் பலராவர். இவ்வுலகமும, இவ்வுலக இன்பங்களும் நிலைபேறுடையன என்ற அறியாமையுடையார்க்கு அறம் உரைத்தல் அறிவுடைமையாகாது; அவர் உளத்தே படிந்துகிடக்கும் அவ்வறியாமை இருள் அறவே அழிதல் வேண்டும்; அவ்வறியாமை நீங்கிய விடத்திலேயே அறவுணர்வு இடம் பெறும்.

அந்துவன் கீரனுக்கு அறமுரைக்க விரும்பிய புலவர், இவ்வுண்மைகளே உணர்ந்தவராதலின், முதற்கண் அவன் உளத்தே படிந்து கிடக்கும் அறியாமையாகிய இவ்வுலகமும், இவ்வுலகில் தான் பெற்றுள பொன்னும் பொருளும் நிலையுடையன என்ற எண்ணத்தைப் போக்க விரும்பினர்; அவன்பால் சென்றார். அந்துவன்கீர! பேரரசர் குடியிற் பிறந்தோன் அல்லை நீ; படைமறவர் பலருள் ஒருவன் நீ பெரியதொரு நாட்டினை ஆள்வோனும் அல்லை, நீ பெற்றுள பொருளும் பெரும் பொருளன்று. பேரரசர் குடியிற். பிறந்து, நின்னாட்டினும் பெரிய நாட்டை ஆண்டு, எண்ணித்தொலையா இரும்பொருள் பெற்று வாழ்ந்த அரசர் பலர் நினக்குமுன் ஆண்டிருந்தனர் என்பதை அறிவை; அவரெல்லாம் இப்போது யாண்டுளர்; பாணரும், புலவரும் பாடிப் புகழ்வன கேட்டும், தம்மைப் பாடிவந்த அப்பாணர் முதலாம் இரவலர், தாம் அளித்த அறுசுவை உணவுண்டு அகமிக மகிழ்ந்ததனை அவர் முகம் காட்டக் கண்டும் அரம்பையர் போலும் அழகிய மகளிர்தம் ஆடல் கண்டும் மகிழ்ந்த அவர்கள், கூகைகள் குரல் எழுப்ப, பேயும் நரியும் பிணந்தின்ன, பிணம்தின் மகளிர் கண்டார்க்கு அச்சந் தரும் ஆடல்புரியும் சுடுகாடடைந்து அழிந்தனர். நின்னை நோக்கப் பல்லாற்றானும் பெரியராய அவர்க்கே, அங்நிலை உண்டாம் எனின், நினக்கு அங்நிலை வருதற்கண் ஐயம் வேண்டுவதின்று: அஃது உண்டாதல் உறுதி; உறுதி' எனக் கூறி நிலையாமை எண்ணம், அவன் உள்ளத்தே ஆழப் பதியுமாறு செய்தார். நிலையாமையுணர்ந்து நடுங்கிய வுள்ளமுடையனாய அந்நிலையில் நிலைபேறுடையன கூறுவான் தொடங்கி, அந்துவன் கீர! நின் உடல் அழிந்து