பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவட்டனார்

185

யுடையேனாதலாலும், அவை வருத்தவும் வருந்தாது ஆற்றியுளேன்” எனக் கூறினாள் எனப் பாடிப் பழந்தமிழ் மகளிரின் பண்பட்ட உளத்தினைப் பாராட்டியுள்ளார் புலவர்.

“பெருங்கல் நாடன் பிரிந்த புலம்பும்,
உடன்ற அன்னை அமரா நோக்கமும்,
வடந்தை தூக்கும் வருபனி அற்சிரம்,
சுடர்கெழு மண்டிலம் மழுங்க, ஞாயிறு
குடகடல் சேரும் படர்கூர் மாலையும்
அனைத்தும் அடூஉநின்று நலிய நீமற்று
யாங்ஙனம் வாழ்தி என்றி, தோழி!
நீங்கா வஞ்சினம் செய்துநத் துறந்தோர்,
உள்ளார் ஆயிலும் உளனே, அவர் நாட்டு
அள்ளிலைப் பலவின் கனிகவர் கைய
கல்லா மந்தி, கடுவனோடு உகளும்
கடுந்திறல் அணங்கின் நெடும்பெரும் குன்றத்துப்
பாடின் அருவி சூடி

வான்தோய் சிமையம் தோன்ற லானே.” (அகம் : க௩௭௮)

காற்று அசைக்க உதிர்ந்த வேங்கையின் பொன் போலும் மகரந்தங்கள் வடிந்த தோகையுடைய மயில்கள், செல்வம் கொழிக்கும் பெருமனையில் வாழும், அணிகொண்ட கூந்தலையுடைய மணமகளிர்போலும் எனக் கூறிய உவமையின் அழகினை அள்ளிப் பருகுவோமாக:

“நிதியம் துஞ்சும் நீவந்தோங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள
வங்கூழ ஆட்டிய அங்குழை வேங்கை
நன்பொன் அன்ன நறுந்தாது உதிரக்

காமர் பீலி ஆய் மயில் தோகை.”

(அகம் : ௩௭௮)