பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவல்முல்லைப் பூதனார்

187.

பொருள் ஈட்டலும், பெருவாழ்வு வாழ்தலும் இயலாது அவர் வழுக்கிய வாழ்க்கையினரேயாவர்; இவ்வுண்மையினைத் தம் பாட்டொன்றில் வைத்து உணர்த்தியுள்ளார் புலவர் :

"தம் நயங்து உறைவோர்த் தாங்கித், தாம் நயந்த
இன்ளமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ,
நகுதல் ஆற்றார் நல்கூர்ந் தோர்,என
மிகுபொருள் நினையும் நெஞ்சமொடு அருள்பிறிது

ஆபமன்; வாழி! தோழி!'

(அகம் : க௫க)


பொருள் ஈட்டும் முயற்சிமேற்கொண்டு பிரிந்து சென்றுளான் தலைவன்; தலைவன் பிரிவால் வருந்திய தலைவியின், கைவளை கழன்றுகுமளவு, உடலும் மெலிந்துவிட்டது; உடல் மெலிய வருந்தும் அந்நிலையிலும், அவள், தன் தனிமை கருதி வருந்தினாளல்லள் ; பிரிந்து சென்ற தலைவர், செல்லும் வழி, தும்பிபோலும் பறவைகளும் மான்போலும் விலங்குகளும், ஆணும் பெண்ணுமாய்க் கூடிவாழும் அன்புநிறை காட்சிகளைக் கொண்டது என்ப; அக்காட்சிகளைக் காணும் அவர் உளத்தே தனிமையால் உண்டாம் என் துயர் தோன்ற, மேற்கொண்ட வினையினை முடியாதே மீண்டு விடுவரோ? அவ்வாறு மீளல் அறனன்றே என்று எண்ணிஎண்ணி வருந்தினள். தலைவியின் வருத்தத்தினை உணர்ந்தாள் தோழி; அவள்பால் சென்று அவட்கு, ஆறுதல் கூறுவாள், "அன்புடையாய்! தலைவர் நின் துயர் கண்டு மீண்டுவிடுவரோ என அஞ்சுகின்றனை;. அவ்வாறு அஞ்சற்க! தலைவர், நீ எண்ணுமாறு பேரன்புடையரன்று பேரன்புடையராயின், நின் வளை நெகிழ வருத்தத்தினைக் கண்டும் பிரிவரோ? கண்ணாற் கண்டும் பிரிந்த அத்துணைக் கொடியராய அவர், அத்துயரை மனதால் எண்ணி மீள்வர் என்ற அச்சம் எமக்குச் சிறிதும் இல்லை. மேலும், காட்டுவழிக் காட்சிகள், நின்பிரிவுத் துயரை அவர்க்கு நினைப்பூட்டுவதினும், பொருளில் வாழ்க்கையால் உண்டாம் பெரும்துயரினையே பெரிதும் நினைப்பூட்டும் இயல்பின; ஆங்கு வண்டுகள், ஆணும் பெண்ணுமாய்ப் பிரிவின்றி வாழ்கின்றன ஆயினும், அக்காடு: