பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவல்முல்லைப் பூதனார்

189


கடமை உணர்ச்சியின் சிறப்பினையும் காட்டிப் பாராட்டி யள்ளமை படித்துப் பயன்பெறத் தக்கதாமன்றோ ?

'

துனியின் றியைந்த துவரா நட்பின்,
இனியர் அம்மl அவர் என, முனியாது,
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும்
பிரியாக் காதலொடு உழைய ராகிய
நமர்மன் வாழி தோழி............
......................................................................
நன்மர மருங்கின் மலையிறந் தோரே...' (அக : உ௪௧)

வழிச்செல்வார், இடைவழியில் இளைப்புத் தீர இருந்தக்கால், ஆண்டு எழும் பல்லியின் குரல் ஒர்ந்து பயனறிந்து செல்லும் பண்பினராதலைக் கூறும் புலவர், அவர்க்கு வருவன கூறும் வாயுடைப் பல்லியைக் கணி கூறுவதில் வன்மையுள்ள பல்லி எனக் கூறும் பண்பு பாராட்டற்குரியது.

"செல்லுநர்க்கு
உறுவது கூறும் சிறுசெந் நாவின்
மணியோர்த் தன்ன தெண்குரல்..
கணிவாய்ப் பல்லி,' (அகம் : க௫க)

புலவர், தம் பாக்களின் இடையிடையே அழகிய உவமைகள் பலவற்றையும் அமைத்துப் பாடியுள்ளமை படிப்பார்க்குப் பெருஞ்சுவை பயந்து நிற்கிறது; புல்லி'னின்றும் துளிக்கும் பனித்திவலை, நூலினின்றும் கழன்றுகும் முத்து நிகர்க்கும்; 'நூலறு முத்தின் தண் சிதர் உறைப்ப” (குறுங்கoச); மரத்து மலர் உதிர, அம்மரக்கிளைகளைத் தாக்கும் தென்றல், பூப்பறிப்போன், மலர்கொய்ய அம்மரக் கிளைகளை அடிக்கும் கோல்போலும், 'புரியிணர், மெல்லவிழ் அஞ்சினை புலம்ப, வல்லோன் கோடறை கொம்பின் வீயுகத் தீண்டி, மராஅம் அலைத்த மணவாய்த் தென்றல்' (அகம்: உக); வாகை மரத்தின், முற்றி உலர்ந்த காய் ஒலிக்கும் ஒலி, ஆடுமகள் அடிக்கும் பறை ஒலி போலும்; "உழிஞ்சில், தாறுசினை விளைந்த நெற்றம், ஆடுமகள் அரிக்கோற் பறையின் ஐயென ஒலிக்கும்.' (அகம் : கடுக) என்ற உவமைகளைக் காண்க.