பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுவேன் கொல்? என்றே அஞ்சுகின்றேன்,” என்று கூறித் தன் முதிர்ந்த அன்பை முன்னிறுத்திக் காட்டினாள்:

“தோளும் அழியும் நாளும் சென்றன;
நீளிடை அத்தம் கோக்கி, வாளற்றுக்
கண்ணும் காட்சி தெளவின; என்னிந்து
அறிவு மயங்கிப் பிறிதா கின்றே;
நோயும் பேரும்; மாலையும் வந்தன்று;
யாங்கர குவென்கொல்? யானே; ஈங்கோ
சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், சாவின்
பிறப்புப் பிறிதாகுவ தாயின்,

மறக்குவேன் கொல்? என் காதலன் எனவே” (நற்:௩௬௭)

இவ்வாறு கூறினாள் ஒருபெண் எனப் பாடிய இப்பாட்டு,

“துறக்கப் படாத உடலைத் துறந்துவெந் தூதுவரோடு
இறப்பன்; இறந்தால் இருவிசும்பு ஏறுவன்;
ஏறிவந்து பிறப்பன்; பிறந்தால், பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்

மறப்பன் கொலோ: என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே.”

என்ற நாவரசர் வாக்கை நினைப்பூட்டி, நினைக்குந்தொறும். கழிபெரும் களிப்பினைத் தந்து நிற்றல் காண்க.

தான் விரும்பிய தலைவற்குத் தன்னை மணம் செய்து தாரார் என உணர்ந்த தலைவி ஒருத்தி, அவனூர் சென்று மணந்து வாழத் துணிந்துவிட்டாள்; அதற்கு அவனும் இசைந்துவிட்டான்; குறித்த நாளன்று இருவரும் புறப்படலாயினர்; அந்நிலையில், தலைவியின் உயிர்த் தோழியாய், அவள் மேற்கொண்ட வினைக்கெல்லாம் உறுதுணை புரிந்தாளொருத்தி, அத்தலைவனை நோக்கி, “அன்ப! தன் தவறு. கண்டு தாய் தன்னே அடித்துத் துன்புறுத்தும் அக்காலத்திலும், குழந்தை அம்மா! எனக்கூவி அவளேயே அணைந்து நிற்கும்; இதைப்போல், நீ இவட்கு இன்பமே தரினும் மாருகத் துன்பமே தரினும் இவள் நின்னல் புரக்கப்படுவளாவள்; தன் உறுதுயரைத் துடைத்துப் போக்குவார் பிறர் எவரையும் இவள் பெற்றிலள்; ஆதலின் இவளை