பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. ஊன்பொதி பசுங்குடையார் பனே ஒலேயால், உண்ணும் கலம்போல் உட்குடைஉடையதாகச் செய்யப்படுவது பனங்குடை இத்தகைய பனங்குடைகளில் உணவு உண்பதும், பூப்பறித்து வைப்ப தும், வழிப்போவார் சோறு கொண்டு போவதும் வழக்கம். "பைஞ்ஞனம் பெருத்த பசுவெள் அமலை இரும்பனங் குடையின் மிசையும்' (புறம் : 177): என்றும், 'அவல் வகுத்த பகங்குடையால் புதல் முல்லேப் பூப்பறிக்குங்து' (புறம்: 852): என்றும், "ஆறுசெல் மாக்கள் சோறுபொதி வெண்குடை." (அகம் : 121) என்றும் வருவது காண்க. இத்தகைய பனங்குடையில், ஊன்கொண்டு செல்வதை வியந்து ஊன்பொதி பசுங் குடை 'என்று கூறிய சிறப்பால் இவர், ஊன்பொதி பசுங் குடையார் என்ற பெயர் பெற்ருர். ஊன்பொதி பசுங்குடையார், இளஞ்சேட்சென்னி' என்ற சோழ அரசன் ஒருவனேப் பாராட்டியுள்ளார்; இளஞ்சேட்சென்னி, நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி' என்றும், சோமான் பாமுளுர் எறிந்த நெய்தலங்கானல், இளஞ்சேட்சென்னி என்றும், செருப்பாழி எறிந்த இளஞ் சேட்சென்னி என்றும் அழைக்கப்பெறுவன். இடையன் சேந்தங்கொற்றனர் என்ற புலவரால், அகநானூற்றில், இளம்பெருஞ்சென்னி என அழைக்கப்பெறுவோனும் இவனே. இளம்பெருஞ்சென்னி எனவும், இளஞ்சேட் சென்னி எனவும் அழைக்கப்பெறும் இவனே, கரிகாற். பெருவளத்தான் தந்தையாகிய உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியாவன். - - . . . .