பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

量2 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்றேர் இளஞ்சேட்சென்னி, நெய்தலங்கானல் என்ற கடற் .கரை நகரை உரிமையாகப் பெற்றிருந்தான்; சோமானுக் குரிய பாமுளுரை வென்று கைக்கொண்டிருந்தான் இவன், தன் காலத்தே, தென்னுட்டுக் கடற்கரைப் பகுதிகளேத் தம் வாழ்விடமாகக்கொண்டு, தமிழ்ப் பேரரசுகளுக்கு இடை யூறு விளேத்து வந்த பரதவர் என்ற நாடோடி வீரர் குழுவின அழித்து, அமைதியை நிலைநாட்டியிருந்தான்; தென்திசைக் கண்ணராகிய பரதவரைப் பாழ்செய்த இவன், வடக்கிலிருந்து தன் அரசிற்குக் கேடுவிளேத் திருந்த வடுகர் என்பவரையும் வென்று அழித்தான்; சேர காட்டை அடுத்துப் பாழி என்ருெரு பேரூர் இருந்தது அது அரிய அரண் அமைந்து இருந்தமையால், பெரும்பொருளேக் கொண்டிருந்தது ; பாழி, கன்னன் என்பவனுக்கும் ஒரு காலத்தில் உரியதாய் இருந்தது : இப்பாழி நகரில், வேளிர், தாம் அரிதின் முயன்று தேடிய பொருளைவைத்துக் காத் திருந்தனர்; இவ்வாறு சிற்ப்புற்ற பாழியைத் தமக்குரிய தாகஆக்கிக் கொள்வதில், சோரும், சோழரும், சில குறுகில மன்னர்களும், கருத்துடையராய்ப் போர் பல ஆற்றி யுள்ளனர்; வடக்கேயிருந்து வந்து தமிழகத்திற்குக் கேடு விளேக்கும் வடுகரும் இதைக் கைப்பற்றி யிருந்தனர்; வடுகரை வென்ற இளஞ்சேட்சென்னி, அவரை முற்றும் அழித்தல்வேண்டும் என்ற எண்ணத்தாலும், தம் சோழர் குடிவங்தோரால், நீண்டகாலமாகவே கைப்பற்றப் பெருமல் இருந்த பாழிநகரைக் கைப்பற்றி, அக்குறையின்ேப் போக்குதல் குடிக்கடனம் என்று கருதிய எண்ணத் தாலும், பாழிாகர்மீது படையெடுத்துச் சென்று, ஆங்கு வாழ்ந்திருந்த வடுகர்களையும் அழித்து, அப்பாழி ந்கரை .யும் கைக்கொண்டான். இளஞ்சேட்சென்னியின் வெற்றிச் சிறப்புக்களைப் பொதுவகையால் போற்றிக் கூறிய புலவர், ஊன்பொதிபசுங்குடையார், அவன் வடுகரையும், பரதவரை யும் வென்ற நிகழ்ச்சிகளே மட்டும் எடுத்துக்கூறிப் பாராட்டி :புள்ளார்: w . . . . 'தென்பரதவர் மிடல்சாய - வடவடுகர் வாளோட்டிய.' (புறம் : டனஅ)