பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊன்பொதி பசுங்குடையார் 13: இளஞ்சேட்சென்னியின் பேராற்றலே விளக்க வந்த, ஆசிரியர், அவன், பகைவருடைய, கைப்பற்றுதற்கரிய கர்வலமைந்த கோட்டை அப்பகைவரிடம் இருக்கும் போதே, இதோ, இந்தக் கோட்டையினே நீ பெற்றுக் கொள்வாயாக எனத் தன்னேப் பாடிவரும் பாணனுக்கு அளிக்கும் அத்துணைத் துணிவும், அக்கோட்டையை அவ்' வாறே வென்று அளிக்கும் ஆற்றலும் வாய்ந்தவனவன் என்று கூறிப் புகழ்வர். " ஒன்ர்ை, ஆரெயில் அவர்கட் டாகவும், நுமது' என, பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்.” (புறம் : 201) உழவர், நெல்லடித்துத் தொகுத்த கெற்களத்திற்குச் சென்று பாடி, கெல்பெற்று மகிழும் பொருநர், அரசர்கள், போர்செய்து வென்ற போர்க்களத்திற்கும் சென்று, அவர் புகழ்பாடி, போரில் அவர் கைப்பற்றிய யானே முதலாயின. வற்றைப் பெற்று மீள்வதும் உண்டு. அவ்வாறு போர்க் களம் பாடும் அவர்கள், அரசனே உழவகை உருவகம் செய்து, அவன ஆங்குச் செய்த செயல்களே உழவர் செயல்களோடு இயைபுடையதாக்கிப் பாடுவதும் செய்வர். இவ்வாறு களம்பாடுவதை ஏர்க்கள உருவகம் என்று கூறுவர் இலக்கண நூலாசிரியர்கள் அத்தகைய ஏர்க் களஉருவகம் ஒன்ருல், இளஞ்சேட்சென்னியின் போர்க்களச் சிறப்பினேப் போற்றிப் புகழ்ந்துள்ளார் நம்புலவர், ஊன் பொதி பசுங்குடையாரும் . . . இவ்வாறு இளஞ்சேட்சென்னியின் வெற்றிச் சிறப்புக் களே விளங்கப் பாடிய புலவர், அவன் கொடைப்புகழைப் போற்றிக் கூறத் தொடங்கி, அவனேப் பாடிவரும் இரவலர், கிளின் வறுமை கிலேயினேயும், அவ்வாறு பாடி வருவார்க்கு, அவன் அணிகள் பல அளித்தலேயும், அவ்வணிகளே, அணிய அறியாது அவர்கள் கிகைப்பதையும், அவர்களின் அறி. யாமை கண்டு அவன் நகைப்பதையும், நகைச்சுவை. தோன்றப் பாடியுள்ளார். - இளஞ்சேட்சென்னி தன்பால் வந்து இரந்து கின்ற இரவன்மாக்களுக்குத் தான் போரிற் கைப்பற்றிய அணிகள்