பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊன்பொதி பசுங்குடையார் 15. மறுப்பினும், அம்மழை நீரையும், அங்கிலத்து விளபொரு 3ளயும் எதிர்நோக்கி வாழும் உயிர்கள் வாழ வழியின்றி மடிந்து மறைந்துபோய்விடும்; அதுபோல், எம்போலும் இரவலர், கின்பால் வந்து இன்னும் சிறிது கொடுப்பாயாக என வேண்டி நிற்பராயின், அவர்க்கு முன்னரே கிறையக் கொடுத்துவிட்டேன்' என்று கூறி மறுத்து விட்டால், அவர் வாழ்வு வளமற்றுப்போய்விடும்; ஆதலின் இரவலரைப் பேணிப்புரப்பதை நீ வாழ்வின் கடன் எனக் கொள்வாயாக' என்று கூறி வாழ்த்தினர். இரந்து வாழ் வார் தம் வாழ்வின் கிலேயற்ற தன்மையினேப் புலவர் எத்துணே துணுக்கமாக அறிந்து கூறியுள்ளார் ! என்னே அவர் அறிவின் திறம்! - 'கழிந்தது பொழிந்து என வான்கண் மாறினும், தொல்லது விளங்கென கில்ம்வளம் கரப்பினும், எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை; இன்னும் தம்மென எம்மனேர் இரப்பின், முன்னும் கொண்டிர் என நும்மனேர் மறுத்தல் இன்னது அம்ம இயல்தேர் அண்ணல்! . பூண்கடன் எங்தை நீ இரவலர் புரவே." (புறம்: உ0க.) இளஞ்சேட்சென்னிபால் கொண்ட பேரன்பினுல், அவன் வெற்றிச் சிறப்பையும், கொடையின் பெருமை யையும் பாராட்டுவதோடு கில்லாது, அவன் புகழ் என்றும் கின்று கிலேபெறுதற்காம் அறவுரைகள் பலவற்றையும். எடுத்துக்கூறிய புலவர், அவன் பால் தாம் கண்ட அருங் குணங்களே எடுத்துக்காட்டிப் போற்றிப் புகழ்வாராயினர். 'இளம்சேட்சென்னி, தன்னே வழிபட்டுப் பணிந்து வாழ்வாரைத் தழுவி அன்புகாட்டும் அருட்குணம் உடை யான், பிறர் குற்றம் கூறுவதே தொழிலாகக்கொண்டார் கூறுவனவற்றை ஏற்றுக்கொள்ளான்; ஒருவன்பால் குற்றம் உண்டு என, அறிவானும், நூலானும் துணிந்தானுயின்,