பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயூர் முடவர்ை 25 தாலும் நல்லவள்; இத்தகைய சிறந்தவள்பால் கொண்ட காதலே, நீங்கள் இடித்துக் கூறுமாறு என்னே அறிவிழக்கச் செய்து துயர்தருமாயின், காதலின் கொடுமையினேக் கூறலும் இயலுமோ? ஆதலின் அறிவறிந்த என் கண்பர் காள்! காதலே நெருங்கவும் செய்யாதீர்கள்!' என்று கூறினைகப் பாடிக்காட்டியுள்ளார்: 'அமிழ்தத் தன்ன அந்திங் கிளவி; அன்ன இனியோள்; குணனும் இன்ன; இன்ன அரும்படர் செய்யு மாயின், உடன்உறைவு அரிதே காமம்; குறுகல் ஒம்புமின்; அறிவுடை யீரே!” (குறுங்: உ0சு) பண்டைத் தமிழகத்தில், அரசர், படையாளர் எனத் தனியாகச் சிலரைத் தேர்ந்து வைத்துப் பேணிவந்தாரல்லர்: அக்கால மக்கள் எல்லோரும் படைப்பயிற்சி பெற்றிருந்தனர்; போர் உண்டாயின், அரசர் செய்ய வேண்டுவதெல்லாம், போர் வந்துற்றது என்பதை ஊரார்க்கு அறிவிக்க வேண்டுவ தொன்றே; அடுத்த கணமே, ஆ ங்குப் பெரும்படை யொன்று திரண்டுவிடும்; ஊரில் உள்ளார் ஒவ்வொருவரும், தம்தம் விட்டில் உள்ள படைக்கலங்களை ஏந்திக்கொண்டு களஞ் சென்றுவிடுவர்: ஊர்க்குடிகளோடு ஒருவனுய் வாழ்ந்து, ஊர்காக்கும் போர் வந்துற்றவுடனே, ஊரைத் தாக்கவரும் பகைவர் படையினத் தடுத்து கிறுத்த எல்லா ரினும் முன்சென்று கிற்கும் விரன் ஒருவனப் புகழ்வார் போல், படையாளரின் பண்டைக்கால அமைப்பு முறையினே விளக்கி யுள்ளார் புலவர்: 'சிறார்க் குடியு மன்னும் தானே கொடிஎடுத்து. நிறையழிந்து எழுதரு தானேக்குச் சிறையும்தானேதன் இறை விழு முறினே." -

  • - . . . . . . . . . - (புறம்: க.க ச)