பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. கழைதின்யானையார் கழைதின்யானே யார் என்ற இப்பெயர் புலவர்க்கு ஏன் வந்தது என்பதை அறிந்து கொள்வதற்கில்லை; தர்ம் பாடிய பாட்டில், யானேயொன்றைக் கூறுங்கால், கழைதின் யானே என்று சிறப்பித்துக் கூறினமையால் இப்பெயர் பெற்ருர்போலும். ஈவார், ஏற்பார் இருவர்க்கும் உள்ள ஏற்றத் தாழ்வுகளே இவர் எடுத்துக்கூறும் முறை மிகமிக நன்று. இவர் பாராட்டைப்பெற்ற பேறுடையான் வல்வில் ஓரி என்னும் வள்ளலாவன். - - கடையெழு வள்ளல்களுள் ஒரியும் ஒருவனவன்; இவன் விற்போரில் வல்லனுதல் அறிந்து இவனே வல்வில் ஓரி என வழங்குவர்: மேற்குத் தொடர்ச்சிமலையைச் சேர்ந்த கொல்லிமலே இவனுக்கு உரியது; கொல்லிமலே பழங்கள் கிறைந்த பலாமரங்கள் பலவற்றைப் பெற்றுளது; அக்கொல்லியைச் சூழ உள்ள, ஒரிக்காடு, மணம் மிக்க மலர்களால் சிறப்புற்றது; கொல்லிமலையில் அழகே உரு வெனத் திரண்ட பாவையொன்றுண்டு. ஓரி, மலேயமான் திருமுடிக்காரியொடு போரிட்டு இறந்தான்; அதன்பின், ஓரியின் கொல்லிமலேயும், காரியின் நண்பராம் சேர வேந்தர்க்கு உரிமை உடையதாயிற்று, ஒரியைக் கொன்ற காரி, அவன் கொல்லிநகரில் வெற்றி ஊர்வலம் வந்து விழாக்கொண்டாடினன். ஓரி மாரிபோல் வழங்கும் வள்ளலாவன். - - - - - - - ஓரியைப் பாடி, அவன் கொடைச் சிறப்பினேப் பாராட்டிய புலவர் கழைதின்யானேயார், வேண்டும் இடம் இது வேண்டா இடம் இது என்னும் வரையறையின்றி, நீர் வற்றிய குளத்திலும், நெல்விளே கிலத்திலும் பெய்வதே போல், ஒன்றும் விளயா உவர்கிலத்திலும் பெய்யும் மழையைப் போன்றே, ஒரியும் தன்பால் வரும் இரவலர்க ளுள் இவர் வல்லார் இவர் மாட்டார். இவர் பழையர் இவர் புதியர் என்று வேறுபாடு கண்டு வரைந்து வழங் காது, வந்தார் அனேவர்க்கும் வரையாதே வழங்கும்