பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழைதின் யானையார் 27 இயல்புடையதைலின், அவன்பால் பரிசில் பெறவந்து, அது பெறமாட்டாது வருந்தினர் எவரேனும் உளராயின், அவர், தாம் புறப்பட்டு வந்த காலத்தின் கொடுமையினே யும், தம் எதிர்வந்த பொல்லாத புள் நிமித்தத்தையும். பழிப்பரே அல்லாமல், ஒரியைப் பழியார் என்று கூறிப் பாராட்டியுள்ளார்: புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை உள்ளிச் சென்ருேர் பழியலர்; அதனல் புலவேன் வாழியர்; ஒரி! விசும்பிற் கருவி, வானம் போல வரையாது சுரக்கும் வள்ளியோய்! கின்னே. (புறம்: உ0ச ஒரியின் கொடைத்திறம் கண்டு வியந்த புலவர் கழைதின்யானேயார், அவன் புகழ் மேலும் சிறக்குமாறு: விரும்பி, அவனுக்கு அரிய அறவுரைகள் சில அளிக்க எண்ணினர். . . ‘செல்வத்துப் பயனே ஈதல் என்ப, இப் பண் புணர்ந்தார்டால் பொருள்சேரின், அது அனேவர்க்கும் பயனளித்துத் தானும் பயனுடையதாகும்; இவ்வுண்மை உணராதார் மாட்டு அச்செல்வம் சேரின், அச்செல்வத்தால் அவரும் பயனுரு.ர்; பிறரும் பயனுளுர்; அதுவும் பயனுருது: உண்ணும் பழம் நிறைந்த மரம், ஊர் நடுவே தோன்றி விடின், மக்களும், விலங்கும், பறவையும், பிறவும் அம். மரத்தை நாடிவந்து கூடிப் பயன்பெறுவர். ஆங்கே ஒன் றிற்கும் உதவா எட்டி மரம்போலும் நச்சு மரம் தோன்றி, மிகப் பழுத்து நிற்பினும், அது கிற்கும் இடத்தை எண் கணிப் பார்ப்பாரும் இரார். அதைப்போல், 'ஈதல் இசைபட வாழ்தல், அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு ' என்ற கொள்கையானேயே மக்கள் தேடிச் செல்வர்; செல்வம் சுருங்கிய காலத்தும், அவன் தருவான் சிறுபொருளாயி' அனும் என்ற நம்பிக்கை உண்மையால், மக்கள் கூட்டமாய்ச் சென்று அவன் இல்லைச்சூழ்ந்து கிற்கத் தவறுவதிலர். அப் பண்பறியான் ஒருவன், பெருஞ்செல்வம் பெற்றுப் பெருவாழ்வு வாழக் காணினும், அவன் ஈயான் என்பதை.