பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

韋0 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்றேர் கொடுக்கும்பொழுதும், பொருள் இல்லாதவர் தம்பால் வந்து இரந்துகின்று, 'யான் வறியேன்; உண்ண உண வில்லேன்," என்று தம்குறை கூறக்கேட்ட பின்னர்க் கெர்டுத்தனுப்புவதினும், அவர் குறையினே அவர் உரையா முன், குறிப்பான் அறிந்து, "நீர் வேண்டிவந்த பொருள் இதோ உளது; கொண்டு செல்க' என்று கூறிக் கொடுத் தல் நன்று; அது, கொடுப்போர் நற்குடிப்பண்பை நாட்டார் உணரத் துணேபுரியும். 'இலன் என்னும் எவ்வம் உரை யாமை ஈதல், குலனுடையான் கண்ணே உள' எனக் கூறு வதையும் காண்க. அவ்வாறு தாம் இரவாமுன், பிறர் கொண்டுவந்து கொடுப்பதை ஏற்றுக்கொள்வதால் இழிவு இல்லையாயினும், அவர் கொடுக்கவந்தக்கால், 'ஐய! பொருள் வேண்டும் புன்கண்மை யுடையேனல்லேன்' என்று கூறி, அதைக் கொள்ளேன்' என மறுத்து வாழ் வோன், கொள்' எனக் கொடுப்போனினும் உயர்ந்தோ வைன். 'கல்லாறு எனினும் கொளல் இது', என்பர் பெரியோர் ஏற்போர், ஈவோர் ஆய இருவர் பாலும் அமைய வேண்டிய இப்பண்புகளைப், புலவர் அழகிய சிறு சிறு சொற்ருெடர்களால் தெளிய உணர்த்தியுள்ளார். 'சயென இரத்தல், இழிந்தன்று; அதன் எதிர் ஈயேன் என்றல், அதனினும் இழிந்தன்று; கொள்ளனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.” -

  • (புறம்: உoச)