பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. கோடை பாடிய பெரும்பூதனுர் கோடைக்கானல் என இப்போது வழங்கும் மலேக்குப் பண்டையோர் வைத்த பெயர் கோடை என்பது : அக் கோடை மலையைப் பாடியோர் பலராயினும், இவர் சான்ருேர் பலரும் வியந்து பாராட்டுமாறு பாடிய சிறப் பால் கோடை பாடிய பெரும்பூதனர் என்று அழைக்கப் பெற்ருர். இனி, பாலேத்திணேயைப் பாடிய பெருங் கடுங்கோ, பாலேபாடிய பெருங்கடுங்கோ எனவும், மடலேறு தலைப் பாடிய மாதங்கீரனுர், மடல் பாடிய மாதங்கீரனர் எனவும் அழைக்கப் பெறுதலேபோல், பெரும்பூதனர் கோடைக் காலத்தின் கொடுமைகளே விளங்கப் பாடிய சிறப்பால் கோடையாடிய பெரும்பூதனர் என அழைக்கப் பெற்ருர் என்றும் கொள்ளலாம். ஆல்ை, இவர் பாடிய பாட்டாக நமக்குக் கிடைத்த செய்யுளில் அவர் கோடை மலேயையோ, கோடைக் காலத்தையோ படிெனர் என்ப தற்கான சான்று ஒன்றும் இல்லை. ஆதலின், அவர் பெயர்க்காம் காரணத்தை அறிந்துகொள்வதற்கில்லே. உண்ணுதற்காம் உணவோ, செய்தற்காம் தொழிலோ பெறமாட்டாப்பாலைநிலத்தில்,அவ்வழிவருவாரை ஆறலைத்து வாழும் மறவர், தம் கிலத்தை அடுத்துள்ள முல்லேகிலத்துட் புகுந்து, அங்குள்ளார்க்குரிய ஆனிரைகளைக் களவாடிச் சென்று விடுவதும், இவ்வாறு பாலகிலத்து மறவர் தம் ஆனிரைகளேக் கவர்ந்து சென்றனர் என அறிந்த அங்கிலத்து விரர், விரைந்து சென்று அம் மறவரை மடக்கி வென்று அழித்துத் தம் ஆனிரைகளே மீட்டுக் கொணர்வதும்; அவ் வாறு ஆனிரைகளே வென்று தந்தாரைப் புகழ்ந்து பாராட்டு வதும், அப் போரில் இறந்தாரைக் கல்லெடுத்து வழி படு வதும் அக்கால வழக்கங்களாம். அவற்றுள் ஒருகாட்சி அயைப் புலவ்ர் பாராட்டியுள்ளார். பகைவர் காட்டு மறவர்கள் தம்மூருடிபுகுந்து தம்காட்டு ஆனிரைகளைக் கவர்ந்து சென்றுவிட்டனர் என்பதை அக்