பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன் வள்ளுவர் என்பார் திருவிழா திருமணம் போன்ற பெருகிகழ்ச்சிகளே முரசறைந்து நகர மாந்தர்க்கு அறிவிக்கும் பழந்தமிழ்க் குடியினராவர். 'திருநாள், படைகாள், கடி நாள், என்று இப்பெருநாட் கல்லது பிறநாட்கு அறையாச் செல்வச்சேனே வள்ளுவ முதுமகன்,' என்று இவர்கள் பாராட்டப்பெறுவர். அக்குடியிற் பிறந்து, பெருஞ்சாத்தன் என இயற்பெயர்பூண்டு அரசியல் செய்திகளை அறிவிக்கும் தொழில் மேற்கொண்டு வாழ்ந்தமையால் இப்புலவர் செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் என அழைக்கப்பெற்ருர். 'என் காதலர் சேய்நாடு சென்று வாழ்பவராயினும் அவர் உள்ளத்தே யானும், என் உள்ளத்தே அவரும் என்றும் பிரியாது உறைவதால், அவர் சேய்மைக்கண் வாழ்வதாகவே எண்ணுவதிலன்," என்று தன் அன்புடை மையினே உணர்த்திய ஒரு பெண், அவர் சென்ற நாட்டிற் கும் எம் ஊருக்கும் இடையே ஒரு பெருங்கடல் உளது எனினும், அவர் நாட்டினின்றும் புறப்பட்ட அலைகள் ஒவ் வொன்றும் எம் வீட்டின் முன்னிடத்தே உள்ள கடற் கரையைத் தழுவாமல் மீள்வதில்லை. அவ் அலேகளைக் காண்பதை அவரைக் காண்பதாகவே கருதுகின்றேன் ஆதலின் அவர் பிரிவால் துயர்கொள்வதிலேன்," என்றும் கூறினுள் எனப் பாடி அக்கால மகளிரின் மனப்பண்பினைக் காட்டியுள்ளார் புலவர் : 'கானல் கண்ணிய சிறுகுடி முன்றில் திரைவங்து பெயரும் என்ப; Bத்துறந்து நெடும் சேண் காட்டா ராயினும், * நெஞ்சிற்கு அணியர்: தண்கடல் காட்டே." (குறுக் உஉஅ) 躲, p. சி. பெ.-3