பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. திப்புத் தோளார் உறுப்பாற் பெயர்பெற்ற புலவர்களுள் இவரும் ஒருவர். இவர் தோளேச் சிறப்பித்து கிற்கும் திப்பு என்ற அடை வந்ததற்கான க்ாரணத்தை அறிந்துகொள்வதற். கில்லை. இவர் பாடிய பாட்டு குறுந்தொகையில் முதற் பாட்டாகத் தொகுத்துப் பாராட்டப்பெற்றுளது எனின் இவர் பெருமையினே என்னென்பது! இறைவன் பாடிய பாட்டு எனப் போற்றப்பெறும் பெருமைவாய்ந்த 'கொங்கு தேர் வாழ்க்கை' என்ற செய்யுட்கும் முன்வைத்துச் சிறப் பிக்கப்பெற்றுள்ளது அப்பாட்டு. - , , ; நான்கடியாலாய அப்பாட்டில் செங்களம், செங்கோல், செங்கோடு, சேய் என நான்கிடங்களில் செம்மைப் பண்பு தோன்றப் பாடியுள்ள புலமை பாராட்டற்குரியது. முருகன், போர்க்களம் பகைவர் உடலினின்றும் ஒழுகிய செங்ரோல் செந்நிறம் பெறுமாறு பெரும்போர் ஆற்றி னமையால், பகைவர் இரத்தக்கறை படிந்து சிவப்பேறிய அம்புடையன் சிவப்பேறிய கோடுகளையுடைய பிணி முகம் என்ற யானேயுடையன் அவ்வெற்றிச் சிறப்பால் பெற்ற விரக்கழல் உடையன் ; அவன் விரும்பி உறையும் இடம் குன்று. அவன் அமர்ந்துறையும் அக்குன்று செங் காந்தள்மலர் கிறைந்து மணம் காறும் மாண்புடையது என முருகனையும் அவனுறை குன்றையும் பாராட்டியுள்ளார் புலவர். இப்பாடலின் அருமை பெருமையுணர்ந்த உரையாசி ரியர் பலரும், அதைப் பல்வேறு அகத்துறைகட்கு எடுத்துக் காட்டாக எடுத்தாண்டுள்ளனர். தோழியின் துணைபெற்றுத் தலைவியின் உறவினப் பெற விக்கிய தலைமகன், தோழிபால் காந்தட்பூவைக் கையுறையாகத் தந்து தன் குறைகூறிய வழி, அதை ஏற்க மறுக்கும் தோழி, 'ஐய! எங்கள் முருகன் உறை குன்றி இலும் காந்தள்மலர் உண்டு; ஆகவே இது வேண்டேம்,'