பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திப்புத் தோளார் 35 எனக் கூறி அக்கையுறையினே மறுத்தாள் எனப் பொருள் கூறுவர் சில உரையாசிரியர். தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி அவனேக் காந்தள் மலர் நிறைந்த குன்றிடத்தே நிறுத்திவிட்டுத் தலைமகள்பால் சென்று அவளே, அவன்பால் செல்லுமாறு கூறுவாள், 'தலைவன் ஆண்டுளன் . அவன்பாற் செல்க,' எனக் கூறல் தகுதியன்று என எண்ணி, குன்று காந்தள் மலர்களால் கவினுற்று விளங்குகிறது ; அதைக் கண்டு களித்து வருவாயாக,' எனக் கூறினுள் எனப் பொருள் கூறுவர் வேறு சிலர். - தலைமகளேக் குறியிடத்தே கொண்டு நிறுத்திய தோழி அவளேவிட்டுப் பிரியுங்கால், தோழி : யான் சென்று காந்தள்மலர் கொய்துவருவல்; அம்மலர் கிறை குன்று, முருகன் உறையும் இடமாம்; ஆண்டு நீ வரின் அம்முருகல்ை அணங்குறுவை; ஆதலின், என்ைேடு ஆங்கு நீ வருதல் ஆகாது. யான் வருங்காறும் சண்டே உறைக.' எனக் கூறிப் பிரிந்தாள் எனப் பொருள் கூறுவர் மற்றும் சிலர். . இவ்வாறு கூறப்பெறும் எல்லாப் பொருளும் ஏற்கு மாறு பாடிய புலமை கிறைந்தது அப்பாட்டு என்பதறிந்து மகிழ்வோமாக. 'செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த செங்கோல் அம்பின், செங்கோட்டு யானைக், கழல்தொடிச் சேஎய் குன்றம் - குருதிப் பூவின் குலைக்காங் தட்டே." (குறுங் :ச)