பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கo, நரிவெரூஉத் தலையார் நரிவெரூஉத் தலையார் என்ற இப் பெயரை இவர்க்கு இட்டார் யார் ? அப் பெயர் இட்டது ஏன் ? என்பன குறித்து எத்தகைய விளக்கத்தையும் அறிந்து கொள்வ. தற்கில்லே ; இவர் உடல்நலமும், தோற்றமும் யாது காரணத்தாலோ வேறுபட்டுத் தோன்றின எனக் கூறு கின்றனர். அவ்வாறு வேறுபட்ட அவர் தோற்றம், எவ்: வுருவைக் கண்டும் அச்சம் கொள்ளா இயல்பினதாய நரிக் கும், அச்சம் தருவதாய் அமைந்திருப்பக் கண்டு இப்பெயர் இட்டனர்போலும் ! கரியும் வெரூஉம் தலையார், நரி வெரூஉத் தலேயார். இவ்வாறு, வேறுபட்ட உடல் தோற்ற முடைய இவர்பால், அன்புடையார் சிலர்,'சேரமான் கரு வூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் இரும்பொறை யைக் காணின் கின் கல்லுடல் பெறுவாய்' எனக் கூறக் கேட்டுச் சென்று, அவனேக் கண்டு, எவரும் வெறுக்கும் தோற்றமிழந்து தம் பண்டைய வடிவினேப் பெற்ருர் என்ற ஒரு வரலாறும் வழங்குகிறது. இவ் வரலாறு அறி யத் துணைபுரிவன, 'சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று கின்னுடம்பு பெறுவாயாகென, அவனேச் சென்று கண்டு. தம்முடம்பு பெற்று கின்ற நரிவெரூஉத் தலையார் பாடியது' என்ற கொளுவும் (புறம் : )ே, நரிவெரூஉத் தலையார், தம் முடம்பு பெற்று வியந்து கூறிய பாட்டு' என்ற பேராசிரியர் உரையுமாம் (தொல். பொருள் : உஇடு), கரி வெரூஉத் தலேயாரின் உடல் வேறுபட்டுத் தோன்றிற்று என்று கூறுவதன் பொருள் யாது? அவ் வேறுபாடு எவ்: வாறு உண்டாயிற்று சேரவேந்தனேக் கண்டு, தம் முடம்பு பெற்ருர் எனக் கூறுவதன் பொருள் யாது? கரிவெரூ உத்தலையார், தன்னக் கண்டவுடனே, அவர், தம் கல்லுடம்பு பெறுமாறு செய்யச் சேரமான் பெற். 1றிருந்த ஆற்றலோ, அருமருந்தோ யாது என்பனபற்றி எவரும் விளக்கம் தந்தாரல்லர். -