பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் கண்டவுடனே, அவர் நோய் நீங்கிற்று அதனல், புலவர் கள் கூறிய காட்டு நாட்டாளுகிய பெருஞ்சேர லிரும் பொறை அவனே என அறிந்துகொண்டார். பிறர்பால் உள்ள பெருந் துயர்போக்கும் பெருமை யுடையோணுகிய பெருஞ் சேரல், நாள் பல வாழ்ந்து, மேலும் பலரின் பிணி போக்கவும் துணைபுரிதல் வேண்டும் எனவும், அதற்காம் அரசாள்பண்பு அவனிடத்தில் அமை, கல்வேண்டும் எனவும் விரும்பினர். ஆளும் அரசனிடத் தில் அன்பும், அருளும் ங்ேகாது கிறைவுற்றிருத்தல் வேண் டும்; அவை அவன் மாட்டு இல்லாயின், அவன் ஆட்சி கெடிதுநாள் கிலேபெற்றிராது; அன்பையும், அருளையும் அடிப்படையாகக் கொண்ட ஆட்சியினேயே எவரும் விரும்பு வர்; அவை இரண்டும் இல்லார், அறநெறி கில்லார்: ஆதலின், அவர் ஆட்சி அழிவதோடு அவரும் பழிபாவங்க ளுடையராய் மீளாத் துயருறுவர் என்ற உண்மைகளே உணர்ந்தவர் நரிவெரூஉத் தலையாராதலின், தாம் நல்லுடல் பெற்று உயர்வதற்கு உறுதுணை புரிந்த ஒர் அரசன், அவ்வாறு அன்பும், அருளும் இலணுய்ப், பழி பாவங்கள் கிறைந்த பாழ்பட்ட வாழ்வுடையதைலே விரும்பினரல்லர்; அதல்ை, அவனேயன்றி, அவனேச் சேர்ந்து வாழும் அவன் நண்பர்களும் அத்தகைய தீநெறியாளராய் இல்லா திருக்கு மாறு வாழ்த்தினர். ஒரு நாட்டு மக்கள், தங்கள் அரசன் தீயனல்லன் என்ற ஒன்றினலேயே, உயர்கிலே பெறுவதோ, பெருமை ! கொள்வதோ இலர் , அவன், தியனல்லன் என்பதோடு நல்லனுமாவன் என்பதையே விரும்புவர்; அரசன், குடி களின் குறையறிந்து ஆளுதல்வேண்டும்; குடிகள், தம் குறையினேக் கூறக் கேட்டபின்னர், அவர்க்குக் குறையுண் டென உணர்ந்து தீர்ப்போன் கல்லரசுடையன.கான்; அவர் குறைகளைக் குறிப்பாலறிந்து போக்குதல்வேண்டும் ; குழந்தை பால் உண்ணும் நேரம் இது என்பதை நினைத் திருந்து ஊட்டி வளர்ப்பவளே தாய் தாய் எனக் கூறத் தக்காள் அவளே ; இறையன்பினும், பால் கினேந்துாட்டும்