பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் ஒவ்வொருவரும் உயர்ந்தோர் போற்றும் உயர்வுடையராதல் வேண்டும் என்ற உணர்வுடையராய நரிவெரூஉத் தலை யார், அவர் அவ்வாறு உயர்வதற்காம் ஓர் அரிய அறவுரை யினே அளித்துள்ளார். - மக்களால் மதிக்கப்பெறுதலே விரும்பும் ஒவ்வொரு வரும் தம் வாழ்நாளில் நல்ல செயல் ஒன்ருவது ஆற்றுதல் வேண்டும். ஆனால், நல்லது செய்தற்கு இடமும் பொரு 'ஞம் வாய்த்தல் வேண்டும். இடமும் பொருளும் எல் லார்க்கும் வாய்த்தல் அரிது; இதல்ை நல்லது ஆற்றுதல் எல்லார்க்கும் இயலாது. அவ்வாறு அவ்விரண்டும் வாய்க் கப்பெருத காரணத்தால் நல்லது ஆற்ற இயலவில்லையே என வருந்துவார், தம்மால் நல்லது செய்து நாட்டார்க்கு கன்மை செய்ய முடியாத அங்கிலேயில் அந் நாட்டார்க்குத் துயர் தரும் தீயசெயல்களேச் செய்யாது இருத்தலே மேற் கொள்வது நன்று, நல்லது செய்தற்கு வேண்டும் பொரு ளும், பிறவும், தீயன செய்யாது இருத்தற்கு வேண்டுவ தின்று ஆதலின் அதனே அவர் செய்தற்கு எவ்விதத் தடையும் இன்ரும். மேலும், மக்கள் மனம் நல்லதைச் செய்வதினும் அல்லதைச் செய்யவே பெரிதும் விரும்பும். உலகச் சூழ் கிலேயும் அல்லது செய்யத்துாண்டும் கிலேயிலேயே அமைக் துளது. ஆதலின், நல்லது செய்வாரினும் அல்லது செய் யாது வாழ்வார், ஆற்றல் மிகப்பெற்றவராதல் வேண்டும். நல்லது செய்வதால் விளையும் நன்மையினும், அல்லது செய்யாமையால் விளையும் நன்மை மிகமிகப் பெரிதாம். அதைப்போலவே நல்லது செய்யாமையால் விளேயும் கேட் டினும் அல்லது செய்வதால் விளயும் கேடும் மிகமிகப் பெரிதாம். இவ்வாறு நல்லன ஆற்றுவதினும் அல்லன ஆற்ருமை எளிதுபோல் தோன்றுவதையும், கிறைந்த பியனேயும் குறைந்த கேட்டினையும் தருவதையும் உண்ர்ந்த நரிவெரூஉத் தலையார் நல்லது செய்ய இயலாதாயினும் அல்லது