பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் எடுத்துக்கொள்' என விடையளிப்பதும், அச்சிறுவர் களின் விளையாட்டின் ஒரு பகுதியாம். இதை உணர்ந்த நம் புலவர், தலைவன், தலைவியைப் பிரிந்து சென்று பொருள் தேட எண்ணுகின்றேன்' என்று கூறுவதுகேட்ட தோழி, அவ்வாருயின், அவள்பால் நீ நுகர்ந்த அவள் நலத்தைத் தந்துவிட்டுச் செல்க,” என்று கூறினுள் எனப் பாடி மகிழ்கின்ருர். 'விட்டென விடுக்குநாள் வருக; அதுே நேர்ந்தனை யாயின், தந்தனே சென்மோ தண்கடற் சேர்ப்பl t உண்ட என் நலனே.”

  • (குறுங்: உகடசு) உலகில் உள்ள பொருள்களே உணர்தற்குத் துனே புரிவன கண், காது, வாய், மூக்கு, உடல் என்ற இவ் வைந்து உறுப்புக்களேயாம். இவ்வைந்தாலும் உணர லாகாப் பொருள்களும் உலகத்தில் உண்டு; அத்தகைய பொருள்களேயும், உயர்ந்த பெரியார்கள், இப்புறக் கருவி களுக்குப் புலனுக்குவர்; அன்பை இவ்வைந்தாலும் உணரல் இயலாது. அதைப்போலவே, காதல், காமம் என்பதையும் அறிதல் இயலாது; நம் புலவர் நரிவெரூஉத்தலேயார், அக் காமத்தைக் கண்முன் கொணர்ந்து காட்டியுள்ளார்.

காதலன் பிரிந்தான்: இவன் பிரிவினே ஆற்ருத அவன் காதலி, கண் உறக்கமின்றிக் கலங்கிநிற்கின்ருள். அவ்வாறு கலங்கிநிற்கும் அங்கிலேதான் காதல் என்று கூறி எவர்க்கும் எளிதில் புரியுமாறு காதலேக் காட்டிய அவர் கைவன்மை யினேக் காணுங்கள் : r "அதுகொல் தோழி! காம நோயே: மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் * - பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே...' (குறுங் :டு)