பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனுர் இவரது இயற்பெயர் புலப்படவில்லை; பழந்தமிழ், மக்கள், தங்கள் முதுமைப்பருவத்தில் கையில் தண்டு. கொண்டு செல்வது வழக்கம். அறிவிற்சிறந்த பெரியோர்கள் தங்கள் பெருமைக்கறிகுறியாகவும் தண்டு கொண்டுசெல்வர். அத்தகைய தண்டுகள் வகையால் பலவாம். தொடித்தலே விழுத்தண்டு என்ற ஒரு தண்டினேப் புலவர் ஒருவர்" குறிப்பிட்டுள்ளார். நம் புலவர், கலைமான் கொம்பாலாகிய தண்டினேக் கொண்டிருந்தமையால் கலைக்கோட்டுத்தண்ட ர்ை எனப்பட்டார் என்ப. இவர் பெயர்க்குமுன் நிகண்டன் என்ற அடைமொழிஉண்மையால்,இவர் தமிழில் நிகண் டொன்று செய்தவராவர் என்று கொள்ளலாம். நூல்கள் பெயர்பெறு மாற்றினேக் கூறும், முதல்நூல், கருத்தன்' என்ற நன்னூற் சூத்திரத்தில், 'இடுகுறியாற் பெயர் பெற்றன, நிகண்டு, கலைக்கோட்டுத்தண்டு முதலியன” என விருத்தியுரைகாரர் கூறுவதை நோக்கின், கலேக்கோட்டுத் தண்டு என்பது கைத்தண்டினேக் குறிப்பது அன்று, அப்பெயருடையதொரு நிகண்டு நூலேக் குறிப்பதாம் என்று கொள்ளவேண்டியுளது. இதல்ை நம் புலவர், கலேக்கோட்டுத் தண்டு என்ற பெயருடையதோர் நிகண்டு நூல் செய்த தமிழ்ப்பேராசிரியராவர் என்பது புலம்ை. - நற்குடி மகளிர், உயிரினும் சிறந்தது நாண் எனக் கொள்வர் ஆதலின், தலைவன் பிரிந்தான எனக் கலங்கும் தம் கிலேகண்டு ஊர்ப் பெண்கள் அலர் அாற்றுவர். அதனல் தம் நாண் அழியும் ஆதலின், அவர் தூற்றுமாறு வருந்து" வதினும், தம் வருத்தத்தை மறைத்து வாழ்தலேக் கடமை யாகக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு மறைப்பதால்" தம் உயிர் போவதாயினும் கவலுதல் கூடாது என்றுரைக் கும் தலைமகள் ஒருத்தியின் உயர்ந்த பண்பாட்டினேப் பாடிப் பாராட்டியுள்ளார் புலவர். 'ஆருயிர் அழிவது ஆயினும், கேரிழை! காத்தல் வேண்டுமால் மற்றே; பரப்புநீர்த் தண்ணம் துறைவன் காண கண்ணுர் தாற்றம் பழிதான் உண்டே..' (கற்: .அ.உ). -lmൺ