பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. நெடும்பல்லியத்தனுர் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என, இசை எயினையும், நாடகத்தையும் மொழியோடு சேர்த்துப் போற்றி வளர்த்தனர் தமிழர்; இசை, வாய்ப்பாட்டோடு கிற்பது என்று கருதினரல்லர் வாய்ப்பாட்டிற்குத் துணையாகப் பல் வேறு இசைக்கருவிகளைக் கண்டு இசையினே வளர்த்தனர்; அவ்விசைக் கருவிகளின் பெயரையும், இயல்பையும் எடுத் துக் கூறுவது இயலாது; முழவு போன்ற தோற்கருவி -களும், குழல்போன்ற துளைக்கருவிகளும், யாழ்போன்ற கரப்புக்கருவிகளும், தமிழகத்தில் தோன்றி இசையெழுப்பி இன்பம் ஊட்டி வந்தன: புரவலர்களேத் தேடிச்செல்லும் பாணர்கள், பல்வேறு இசைக்கருவிகளேயும் ஒரு பையில் இட்டுக்கட்டி எடுத்துச் செல்வர்; அவ்வாறு பாணன் ஒரு வன் யாழ், சிறுபறை, ஒருகண் மாக்கிணேயாய பல்வேறு இயங்களே எடுத்துச்சென்ருன் எனப் பாடிய சிறப்பால், இப்புலவர் நெடும்பல்லியத்தனர் எனப் பெயர்பெற்ருர், நெடும்பல்லியத்தனர், பாண்டியன் பல்யாகசாலே முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியுள்ளார். பாண்டியன் .பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, பஃறுளி யாறும், குமரிக்கோடும் கடலால் கொள்ளப்படுதற்கு முற்பட்ட காலத்தே வாழ்ந்தவன தலின், அவனைப் பாடிய இவரும், அக்கடல்கோளுக்கு முற்பட்டவராவர். வறுமையின் கொடுமையால், மிக்க நீரிட்டு அட்ட புற்கை உணவுண்டு வாழ்ந்த புலவர்கள், முதுகுடுமிப் பெருவழுதியைக் கண்டு தம் வறுமை நீங்கி நல்லுணவு உண்டு மகிழ்வர், என்று கூறி வழுதியின் வண்மையினே விளக்கியுள்ளார் புலவர்: 'கல்யாழ், ஆகுளி, பதலேயொடு சுருக்கிச் செல்லாமோதில் சில்வளை விறலி குடுமிக் கோமாற் கண்டு ... : - நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரம்கே. (புறம்: சுச)