பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடும்பல்லியத்தனர் 45° பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' போர்வெறிமிக்க பேரரசனவன்; அவனேப் பாடிய புலவர், அவனே அவன், பகைவர் காட்டகத்தே நடந்த போர்க் களத்திலேயே கண்டு, ஆங்குப் போர்க்களத்தே வீழ்ந்து கிடக்கும் பிணங்களின் பக்சூனே உண்ணவேண்டிப் பறவைத் திரள் ஒன்று கூடுமாறு பகைவர்தம் யானேப்படைகளைப் பாழ்செய்த அவன் பேராண்மையினேயே பாராட்டியுள்ளமை, யுனாக. 'களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை விசும்பாடு எருவை பசுந்தடி தடுப்பப் பகைப்புலம் மரீஇய தகைப்பெரும் சிறப்பின் குடுமிக் கோமான்' (புறம்: சுச.): பரத்தையிற் பிரிந்து வந்த தலேவனுக்குத் துரதாய் வந்த தோழியை நோக்கி, "தலைவர், மலைகள் பலவற்றை இடையிலே கொண்ட மிகச் சேயகாட்டில் வாழ்பவரும் அல்லர்; தம்மூர் மரங்கள் நமக்குத் தோன்றமாட்டாத சேய்மைக்கண் உள்ள ஊரில் வாழ்பவரும் அல்லர்: காம்: நாள்தோறும் காணுமாறு, அழைத்தால் உடனே வரலா கும் அண்மையிடத்தே இருந்தும், முனிவர் பெருமக்களேக் கண்டார் அவர் தூய்மையினேயும், தம் தூய்மையின்மை யினையும் எண்ணி அஞ்சி விலகி ஒழுகுவதைப்போல், என்னே அணுகி வாழ அஞ்சி விலகி வாழுகின்ருர், இத் தகையாராய தலைவரிடத்தில், பண்டொருகால் யானும் அன்புகொண்டிருந்தேன்; ஆளுல், அது இப்போது இல்லா மற் போய்விட்டது," என்று தலைமகளொருத்தி கூறிஞ. ளாகப் பாடியுள்ளார்: 'மலேயிடை யிட்ட காட்டரும் அல்லர்; மர்ந்தலை தோன்ரு ஊரரும் அல்லர்; கண்ணிற் காண கண்ணுவழி இருந்தும், ! கடவுள் கண்ணிய பாலோர் போல ஒரீஇ ஒழுகும் என்னேக்குப் . - பரியலென் மன்யான்; பண்டொரு காலே." . - . ... " (குறுக்: உ0கூ}