பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. நெட்டிமையார் மக்கள் உறுப்புக்களுள் அவர்க்குச் சிறப்பளித்து கிற்பன கண்கள் : அக்கண்களுக்கு அழகும், பாதுகாப்பும் அளித்து கிற்பன அக்கண்களின் இமைகள் . அத்தகைய இமைகள் எல்லோர்க்கும் அமைவதேபோல் அமையாது, சற்று நீண்டு அமைந்துவிட்டமையால் இவர் கெட்டிமையார் என அழைக்கப்பெற்ருர், கண்ணிமை நீண்டிருத்தல் அழகன்மையின், அதனுல் ஒருவர் பெயர் படைத்துக்கொள்வர் என்பது மக்கள் இயல்பன்று என்று மேற்கூறிய காரணத்தை மறுத்து விட்டு, 'நெடுந்தொலேவிலுள்ள பொருகிான் கூர்ந்து கோக்கி யறியும் கண்ணே, கெட்டிமையெனச் சிறப்பித்துரைத்த கயங் கருதி, இவர்க்கு இப்பெயர் உண்டாயிற்று; இவர் பஃறுளியாறு கடல்கோட்படு முன்பு இருந்தவராதலின், கடல்கோட்குப் பின்னர்த் தோன்றிய சங்ககாலத்தில் அப் பாட்டு இறந்துபோயிற்குதல் வேண்டும்,' என்று கூறி, இவர் பெயர்க்கு வேறு காரணம் காட்டுவாரும் உளர். ஐயூர் முடவனுர், நரிவெரூஉத்தலையார், பரூஉமோவாய்ப்பதுமன், பெருந்தோள் சாத்தன் என இயற்கையொடு முரணிய உறுப்புநலன் பெங்குரை, அவற்ருல் பெயரிட்டு அழைத் தலே இகழ்ச்சிக்குரியதாகக் கொள்ளாது, அப்பெயரிட்டே அழைத்துள்ளனர். ஆதலாலும், அவர் பாடிய பாக்களுள் பல அழிந்திருத்தலும் கூடும் , அவ்வாறு அழிந்துபோன பாக்களுள், நெடுந்தொலைவிலுள்ள பொருளைக் கூர்ந்து நோக்கியறியும் கண்னே கெட்டிமையெனச் சிறப்பித்து உரைத்திருத்தலும் கூடும்; அதனல், அவர்க்கு இப்பெயர் உண்டாயிருத்தலும் கூடும் என்றெல்லாம் கூறுவது ஏற். புடைய வாதங்க்ளாகா ஆதலாலும், அவர் கூறும் காரணம் அக்துகீனப் பொருத்தம் உடையதன்று -