பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஎ. பாரதம் பாடிய பெருந்தேவனுர் தேவனர் என்ற தெய்வப் பெயருடையாாய இவர் தாம் பெற்றுள்ள அறிவின் பெருமைகண்டு, அக்காலமக்கள் பாராட்டி அளித்த பெருமை என்ற சிறப்பினேயும் ஏற். ஆறுக்கொண்டு பெருங் தேவனுர் என்ப்பட்டார். சங்க காலத்தே பெருந்தேவனர் என்ற பெயருடையார் பலர் இருத்தலின் அவரின் பிரித்து வேறுபாடு காண்டற்குப் பாரதம் பாடிய என அவர் செய்த அருஞ்செயலே, அவர் பெயரோடு கூட்டி, பாரதம் பாடிய பெருந் தேவனர் என அழைத்தனர். வடமொழி வியாச பாரதத்தை வெண் பாவும், அகவலும், உரைநடையும் விரவிவரத் தமிழில். பாடியுள்ளார். இவர் பாடிய பாரதம், முழு நூலாக இப்போது கிடைத்திலது, தொல்காப்பியத்தில், ஆசிரியர் கச்சிர்ைக்கினியர் எடுத்தாளும் ஒரு சில செய்யுட்கள் : தவிர, நூல் முழுதும் அழிந்துவிட்டது என அறிஞர்கள் கூறுகின்றனர். இவர் தொண்டைநாட்டைச் சேர்ந்தவர். என, "பாரதம் பாடும் பெருந்தேவர் வாழும் பழம் பதி. காண், மாருதம் பூவின் மணம் வீசிடும் தொண்டைமண் டலமே,” என்று வரும் தொண்டை மண்டல சதகச் செய்யுள் கூறுகிறது. இனி, பாரதக் கதையினே முழுதும். வெண்பாவினல் பாடிக் காட்டும் பாரத வெண்பா என்ற நூல் ஒன்று அச்சாகி வெளிவந்துளது; இப் பாரத. வெண்பாவின் ஆசிரியர், சங்ககாலப் பாரதம் பாடிய பெகுக் தேவனரே என்று கூறுவர் சிலர். பாரத வெண்பாவில், விநாயக வணக்கமும், தெள்ளாற்றில் வெற்றிகொண்ட கந்திவர்ம பல்லவனும் குறிப்பிடப்பட்டுள்ளனர் ஆகளின், இந்நூல் பல்லவர் காலத்திற்குப் பிற்பட்ட நூல் எனப் புலப்படுவதால், சங்ககாலப் புலவராகிய பாரதம் பாடிய பெருந் தேவனுர், இந் நூலின் ஆசிரியர் ஆகார் என்று கொள்க, ... -- . . . . . . . . . . . l