பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலக்கோதமனுர் .6建、 பழைய தமிழகத்தில், பூழியர், மழவர், கொங்கர் என்ற போர்வீர மரபினர் பலர் வாழ்ந்திருந்தனர்; பகைவர் நாடுக்ளே வென்று அழிப்பதே தொழிலாக விளங்கிய பல்யானேச் செல்கெழு குட்டுவன் தன்படையின் வன் மையை மிகுத்தற்பொருட்டு, அவ்வீரர்களே வென்று தன்படையில் தொழிலாற்றுமாறு செய்தான்; பூழியர் என்பர்ர் பூழிகாட்டில் வாழ்ந்திருந்த ஆயர் ஆவர்; இவர்கள் மிகப் பெரிய ஆனிரைகளையும், பலப்பல யானே களேயும் கொண்டிருந்தனர் ; செருப்பு என்ற பெயருடைய தொரு மலேயினேயும் உரிமையுடையதாகப் பெற்றிருந்த னர்; இவர்கள் முல்லைப்பூவால்ாய கண்ணியணிந்துகொண்டு, தம் ஆனிரைகளைப் புல்கிறைந்த பரந்த வெளிகளில் மேய விட்டுவிட்டுக் காட்டில் வீழ்ந்து கிடக்கும் மணிகளைப் பொறுக்கிக்கொண்டு வருவர்; 'முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர் புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பிக் கல்லுயர் கடத்திடைக் கதிர்மணி பெறுTஉம் மிதியல் செருப்பின் பூழியர் கோவே (பதிற்று: உக): பூழியர், மழவர், கொங்கர் ஆகிய மூவருள்ளும், மிகப் பேராற்றல் வாய்ந்தவர் மழவராவர் ; மழவர் சிறந்த குதிரைப்படை யுடையவர் ; விற்போரில் வல்லவர்; எத் துணை நெடிய நாடுகளுக்கும் விரைவில் சென்று வென்று மீளும் இயல்பினர்; அருள் உள்ளம் சிறிதும் இன்றி ஆறலேத்துத் துயர்விளப்பர்; இம்மழவர்களால் அழிவுற்ற நாடுகள் பல. இதல்ை இவர்களே வென்று இவர்கள் ஆற்றலே அடக்கிய அரசரும் பலராவர். மழவர் இன்ன ராதல் அறிந்த பல்யானேச் செல்கெழுகுட்டுவன், அவர் க்ளேத் தன் துணைவராய்க் கொண்டான். அவர்கள் அவ. னுக்கு அவன் உடலேக்காக்கத் துணைபுரியும் கவசம்போ லிருந்து துணை புரிந்தனர் என்று கூறுகிருர் புலவர் பாலேக் கோதமனர்: . . . . . - o . -