பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் “வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழ்ங்குடி, பண்பில் தலைப்பிரிதல் இன்று,' என்றும், 'அடுக்கிய கோடிபெறினும் குடிப்பிறந்தார், குன்றுவ செய்கல் இலர்” என்றும் வள்ளுவர் கூறும் குடிமையின் இயல்பினே உணர்ந்: தவர் பெருஞ்சித்திரனர். தாமும், தம் சுற்றமும் வறுமை யால் வாடியக்காலும் தம் பெருமைக்கு இழுக்குத்தரும் செயலேச்செய்ய எண்ணுவாரல்லர் அவர். பெருஞ்சித் திரளுர்பால் அமைந்திருந்த வறுமையிற் செம்மையாம் பண்பு, அவர் வெளிமான், இளவெளிமான், குமணன், அதியமான் ஆகியோரைப் பாராட்டிய பாக்களால் நன்கு புலகுைம். வெளிமான் என்ற பெயருடைய குறுகிலத் தலைவன் ஒருவன் இருந்தான். அவன் மிக்க அருள் உள்ளமும், கொடைக்குணமும் உடையவன். வறுமையால் வாடிய புலவர் பெருஞ்சித்திரளுர், வெளிமானப் பாடிப் பொருள் பெற்றுவர விரும்பினர். அவனுார் சென்று அவனேப் பாடினர். புலவர் பாவின் பெருமையுணர்ந்த வெளிமானும் அவர் வேண்டுவன அளித்து விடை தர எண்ணினன். ஆல்ை அந்தோ! அதற்குள் அவன் உயிர்போகும் அயர் நிலை எவ்வாருே வந்துற்றது ; அக்கிலேயிலும் அவன் புலவரை மறந்தானல்லன். தன் அருகிருக்கும் தன் தம்பி யின்பால், புலவர்க்கு வேண்டுவன அளித்துப் பணிந்து: விடைகொடுப்பாயாக என்று கூறி உயிர்விட்டான். வெளி. மான் பிரிவு புலவர்க்கு ஆருத்துயர் அளித்தது. "கோடை கொளுத்த, கால் கொப்புளிக்க, வெந்து வியர்த்து வருவார் தமக்குப் பெருநிழல் அளித்துப் பேணும் பழுமரம் போன்று வறுமையால் வாடி வருவார். தமக்கு மருது அளிக்கும் மாண்புடையானேப் பாடிய பாட்டு பயனளிக்கும். என்று எண்ணி, அவன் தரும் பொருள்மேற் சென்ற என் ஆசை அந்தோ! அழிந்தது மறைந்து மண்ணுயின்ை மன்னவன் என்னேப்போலும் இரவல் மாக்கள், அந்தோ ! இனி.என்னவர்'என்றெல்லாம் கூறி அழுதார், அரற்றினர்.