பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்பாலும் பெயர்பெற்ருேள் தானி லாளர் வேளாரல்லர்; - வருகெனல் வேண்டும் வரிசை யோர்க்கே பெரிதே உலகம்; பேணுங்ர் பலரே; மீளி முன்பின் ஆளி போல - உள்ளம் உள்ளவிங் தடங்காது வெள்ளென கோவாதோன் வயின் திரங்கி, வாயா வன்கணிக்கு உலமரு வோரே. (புறம் : உஎே) 'செஞ்சே! புலி, தான் கொல்லக்கருதிய களிருகிய இர்ைதவறுமாயின் தன் வயிற்றுப் பசியைத் தணித்தற் காக எலியைப்பற்றிக் கொல்ல எண்ணுது ; அதுபோல், இவன் அளிக்கும் இச்சிறிய பரிசிலே ஏற்றுச் செல்லுதல் நமக்கு முறையன்று. கடல் கோக்கிப் பாய்க்தோடும் ஆற்றுப் புனல்போல் விரைந்து வேற்றிடம் சென்று விழுப் பொருள் பெற்றுவருவோமாக ' என்றும் வன்சொல் வழங்கி வெகுண்டது அவர் வாய், "புலிபார்த்து ஒற்றிய களிற்றிரை பிழைப்பின் எலிபார்த்து ஒற்ருதாகும்; மலிதிரைக் கடல்மண்டு.புனலின் இழுமெனச் சென்று கனியுடைப் பரிசில் தருகம்; - - எழுமதி நெஞ்சே! துணிபு முத்துறுத்தே." (புறம்: .க.எ) சினந்து புறப்பட்ட சித்திானுர், தாம் விரும்பும் பரிசில் அளிப்பான் யாவன் என எண்ணுவாராயினர். அதியமான் நெடுமானஞ்சி, ஒளவைக்கு அரிய கெல்விக்கனி அளித்த அரிய செயல், அவர் கினேவிற்கு வந்தது : தாம் விரும்பும் பரிசில் கல்கும் பண்புடையான் அதியன் எனக் கருதினர். உடனே அதியன் அரசியலிருக்கையாம் தகடுள் சென்று தம் தகுதி வழுவாது பாடிப் பரிசில் வேண்டி புலவர் வருகையறிந்த அதியமான் அவரை அழைத்து அவர் அறிவின் திறம் கண்டு அகமகிழ்த்து பரிசில் அளிக் சக் தவறிவிட்டான். அரசியல் அலுவல் மிகுதியாலோ,