பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 85. புலவர்தம் பெருமையைப் பாடிப் பாராட்டுகிருர் புலவர் பெருஞ்சித்திரனர் வாழ்ந்த காலம், பொருமை புலவர்க்கு அணிகலன்' என்ற அழிவுரை தோன்ருப் பொற்கால மாகும்; அவன் என்ன புலவன்? நான் பாடிய பாட்டின் பொருள் உணரமாட்டான் அவன்; நாலு பாட்டு நன்முக மனப்பாடம் வராது; மேடைஏறி ஒரு வார்த்தை கூற வராது; இவனும் புலவய்ை வந்துவிட்டான்' என்பன போன்ற புல்லுரைகள் புகாத காலம். புலவரைப் புலவர் மதித்துப் பாராட்டும் பண்பு நிறைந்த காலம், பெருஞ் சித்திரனர் வாழ்ந்த காலம். பெருஞ்சித்திரனர் என்ற பெருமைக்குரிய பெயர்கொண்டு சிறந்த புலவர் சித்திரனுர், தம்மைப்போலும் புலவர்களேப் போற்றுவது பாராட்டம் குரிய பண்பன்ருே வள்ளல்களின் பெருமை கூறிவரும் புலவர், ஆய் அண்டிரனேக் கூறுங்கால், அவன் பெற்றுள்ள ஏனேப் பெருமைகளே எல்லாம் எடுத்துக் கூருது, ஆய், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாராட்டிய பண் புடையவன் என்று பாடி, புலவராற் பாடப்பெறும் பெருமையினேக் கூறியதோடு அமையாது, முடமோசி யாரைக் குறிப்பிடுங்கால், அவர் புலமைநலம் தோன்ற, 'திருந்துமொழி மோசி' என்றும் கூறிப் புலவர்மாட்டுத் தாம் கொண்டுள்ள பெருமதிப்பினை நன்கு புலப்படுத்தி யுள்ளார். 'திருந்துமொழி மோசிபாடிய ஆய்." பாம்பின் கால் பாம்பன்ருே அறியும் புலவர் பெருமையினேப் புலவரே அறிவர்! -