பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ0. பெருந்தலைச் சாத்தனுர் சாத்தனர் என்பது இவரது இயற்பெயர்; அது ஐய ைைரக் குறிக்க வழங்கும் ஒரு தெய்வப் பெயராம். ஒரு வர்க்கு இயல்பாக இருக்கவேண்டும் அளவிற்கு மேலும் பருத்த தலையுடைமையால், சாத்தனர் பெருந்தலேச் சாத்த னர் என அழைக்கப்பட்டார். எத்தகைய இடர்வந்துறி அனும் சிறிதும் உளம் கலங்கா உறுதியுடையாரை இரும்புத் த லேயர் என்பதும், பேரறிவும், பெருஞ்சூழ்ச்சியும் வல்லாரை இரட்டைத்தலேயர் என்பதும் உலகவழக்கு. அதைப்போன்றே, சாத்தனுர்பால் காணலாம் அறிவின் பெருமை கண்ட அக்காலத்தார், இவரைப் பெருந்தலேயர் என வழங்கினர் எனலும் பொருந்தும். கொடைவள்ளல் குமணனுடைய தலையைக்காத்த பெருமையுடைமையால் பெருந்தலேகாத்த சாத்தனர் என அழைக்கப்பெற்ற இவர், காலம் செல்லச்செல்லப் பெருந்தலைச் சாத்தனர் என அழைக்கப்பெற்ருர் என்று கொள்வதும் பொருந்தும். பெருந்தலே என்பது உறுப்பைக் குறிக்க வந்ததன்று அவர் பிறந்த ஊரைக் குறிக்க வந்ததாம்; இவர் கொங்குநாட்டில் பெருந்தலேயூர் என வழங்கப்பெறும் பெருந்தலே என்ற ஊரினராதலின், பெருந்தலேச்சாத்தனர் என அழைக்கப் பெற்ருர் என்பர் சிலர்; ஆவூர் மூலங்கிழார் மகளுராகிய பெருந்தலேச்சாத்தனுரும், இவரும் ஒருவரே என்று சிலர் கொள்கின்றனர். - - - பெருந்தலைச்சாத்தனர் மிகப் பழைய காலத்திலேயே தெய்வத் தமிழ்ப்புலவராவர் என்று மக்களால் பாராட்டப் பெற்றுள்ளார் என்பது, "பெருஞ் சித்திரனர் செய்யு ளும் ஒளவையார் செய்யுளும், பத்தினிச் செய்யுளும் முதலாக வுடையனவெல்லாம் எப்பாற்படுமெனின், ஆரிடப்போலி யென்றும், ஆரிடவாசகம் என்றும் வழங்கப்படுமென்க. இவைகளெல்லாம், இருடிகளல்லா ஏனேயோராகி மனத்தது. பாடவும், ஆகவும், கெடவும் பாடல்தரும் கபிலர், பரணர், கல்லாடர், மாமூலர், பெருந்தலைச்சாத்தர் இத்தொடக் கத்தாராலும், பெருஞ்சித்திரளுர் தொடக்கத்காராலும்