பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்றேர் வறுமையிற் செம்மையே வாழ்வில் உயர்வளிக்கும்" குமணன் நாடிழந்து, ஒடிவந்து காட்டுள் உறையும் அக் காலத்தும், தன்கொடைக்குணத்தில் குறைந்தானல்லன். காட்டுள் வாழும் குமணனைச் சென்று கண்டார் பெருங் தலைச்சாத்தனர்; குமணன், இரவலர் இன்மை தீர்க்கும் குடிப்பிறந்தவனுதலின், அவன் யாண்டுறையினும் கொடுப் பன் எனக் கருதினர்; மேலும் புலவர்தம் வறுமையின் கொடுமை, குமணன் வாழ்வது காட்டில் என்பதை மறக்கச் செய்ததுபோலும். அவர் விட்டில் அடுப்பில் தீமூட்டிப் பலநாள் ஆயின, அதல்ை காளான் பூத்து உயர்ந்து விளங் கிற்று அவ்வடுப்பு: அவர் குழந்தை பசியால் வாடி, பாலின்றி வறண்டுபோன தர்யின் மார்பைச் சுவைத்து ஆண்டுப் பால்பெருமையால் அழுதழுது வாடும்; குழந்தை யின் அழுமுகம் காணுந்தொறும் கண்கலங்கிகிற்பாள் அவர் மனேவி. இது புலவரின் விட்டுகிலே. அவர் குமணனுக்குத் தம் வாழ்வின் சிறுமையினையும், அவன் பெருமையினேயும் விளங்க உரைத்தார்; இங்கிலேயில், என் கிலேயறிந்து கொடுப் போன் நீ ஒருவனே ஆதலின், நீ கொடுத்தாலன்றிப் போகேன்,' என்று கூறி கின்ருர். தன் வறுமையும், தன் னேப் புரக்கவேண்டிய அவன் கடமையும்பற்றிப் பாடினர். "ஆடுகணி மறந்த, கோடு உயர் அடுப்பின் ஆம்பி பூப்பத். தேம்புபசி உழவாப், பாஅல் இன்மையின், தோலொடு திரங்கி, இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலே சுவைத்தொறு அழு உம்தன் மகத்துமுகம் நோக்கி, நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக்கண் என் . மனேயோள் எவ்வம் நோக்கி, கினை இ நிற்படர்ந் திசினே கற்போர்க் குமண ! என்கில அறிந்தனே ஆயின், இங்கிலத் தொடுத்தும் கொள்ளாது அமையலென்; அடுக்கிய பண்ணமை நரம்பின் பச்சை கல்யாழ் - மண்ணமை முழவின் வயிரியர் . இன்மை தீர்க்கும் குடிப்பிறந்தோயே." (புறம் : சசுச)