பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலேச் சாத்தனர் 93% புலவர் வறுமையிற் செம்மை யுடையராவர் தாம். வறுமையால் வாடிய காலத்திலும், பொருள் தருவார் விரும்பித் தாராதவழி, அப் பொருளைப்பெற்று வாழ கினேவாரல்லர்; அவ்வாறு அளிப்பார் அரசருள் அரசரே ஆயினும், அவர் பொருள்பெற கினேயார். புலவர்தம் இப் பண்பு, பண்ணி எனவும், கடியநெடு வேட்டுவன் எனவும், வழங்கப்பெறும் கோடைப் பொருநன் என்பானேப் பாடிய பாட்டொன்ருல் நன்கு விளங்குகிறது. மதுரை மாவட்டத்தில் கோடைக்கானல் என இன்று. அழைக்கப்பெறும் மலேக்குச் சங்க காலத்தில் கோடைமலை என்பது பெயர்; அம் மலை பண்ணி என்பானுக்கு உரியது; அவன் அம் மலைக்கு உரியதை லறிந்து அவனேக் கோடைப் பொருநன் என்றும், அழைப்பர் : கோடை மலேக்கு அடிவாரத்தே உள்ள கடியம் என்ற சிற்றுாரையும் உரிமை கொண்டிருந்ததாலும், வேட்டை யாடுவதில் வன்மைபெற்று விளங்கியதாலும் கடிய நெடு வேட்டுவன் என்றும் சிலர் அழைப்பர்; இவன் பாண்டிய வேந்தர்பால் படைத்தலேமைத் தொழில் மேற்கொண்டிருந்தான் : யானே களேப் பிடித்துப் பழக்குவதில் பண்பட்டவன். பெரிய கொடையாளி; , யானேகளுக்குப் போர்ப்பயிற்சி அளிக் கும் அச் சிறுகாலம் நீங்க, எஞ்சியுள்ள நாள்முழுதையும், இரவலர்க்கு ஈதல் தொழில் மேற்கொண்டே கழிக்கும். கழிபெரும் கைவண்மை யுடையவன், பண்ணன் இன்ன தைல் அறிந்து, புலவர் பெருந்தலைச் சாத்தனர், அவன்பாற். சென்று, "திருவீழ் மார்பின் தென்னவன் மறவன் குழியிற் கொண்ட மராஅ யானே - மொழியின் உணர்த்தும் சிறுவரை யல்லது வரைகிலே யின்றி இரவலர்க்கு ஈயும் வள் வாய் அம்பின் கோடைப் பொருநன் - - பண்ணி.” - (அகம்:கங்) என்று அவன் புகழ்கூறிப் பாராட்டினர். கடியநெடு வேட் டுவன், யானேகளுக்குப் பயிற்சி அளிக்கும் வேலே மிகுதி