பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 உவமையாற் பெயர்பெற்ருேர்

அவர்தினை மேய்தங் தாங்குப் பகையா கின்றவர் நகைவிளை யாட்டே'

. (குறுங் : கூகச) தலைவனைத் தோழி பழிக்கத் தன் ஆற்ருமை எந்த அளவு துணைபுரிந்து விட்டது என்பது அறிந்து அஞ்சிய தலைவி உள்ளம் தெளிந்து உறுதி கொள்வாள்; தோழி, தன் கடன் குறைவற முடிந்தது கண்டு மகிழ்வாள்.

தலைமகளைத் தேற்ற வன்சொல் சிறிதாவது வழங்க வேண்டும் என்ற நோக்கத்தினலேயே, தோழி குறவர் செயலைக் குறிப்பிட்டாள். எனினும், அதனுல் தல்வனே வெறுத்தல் வேண்டும் என்னும் கருத்தினள் அல்லள் ; அவள் அவ்வாறு கூறுவது அறமுமாகாது; தோழிக்கு அது கருத்தன்று என்பதை அறிவிக்கவே குறச் சிறுவர் களேக் குறுகிய முன்கையினர்-குறியிறைப் புதல்வர்-என்றார், குறுங்கையர்பால் பேரறிவு காணல் அரிது; பேரறிவினர் நீண்ட கையினாதல் இயல்பு. குறவர் செயல் அறச் செய லற்றது; அவர் செயல் நமக்குப் பொருந்தாதென்பதைக் குறியிறை என்ற ஒரு சொல்லினலேயே விளங்கவைத்தமை பால் இச் செய்யுளைப் பாடிய புலவர் குறியிறையார் என வழங்கபபடடார். - - . . . . . . .