பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தும்பி சொகினனர் 115

என்ற ஒர் ஊர் உளது; அவ்வூர்க் கோயிலில் காணப்படும் சோழர்காலக் கல்வெட்டுக்கள், அவ்வூரைத் தும்பையூர் என்று குறிப்பிடுகின்றன; சொகினனர் இத் தும்பை யூரைச் சேர்ந்தவராவர் ; ஆகவே அவர் பெயர் தும்பைச் சொகினனர் என்றே வழங்குதல்வேண்டும் ' என்றும் கி.முவா .

தம்பியைப் பாடியவர் பெயர், தும்பியைப் பாடிய என்றே அடைபடுத்தல்வேண்டும் எனல் பொருந்தாது ; ஒாேர் உழவு, தனிமகன், தொடித்தலே விழுத்தண்டு முத லாயவற்றைப் பாடிய புலவர் பெயர்கள் ஒரேர் உழவு பாடிய, தனிமகன் பாடிய, தொடித்தலை விழுத்தண்டு பாடிய என அடையடுத்து வராமல், ஒரேர் உழவனர், தனி மகளுர், தொடித்தலை விழுத்தண்டினர் என்றே வழங்குதல் காண்க. பல நூல்களைப்பற்றிய பல ஏடுகளில் பயில வழங்கும் தும்பி என்ற பாடத்தை ஒதுக்கிவிட்டு, புதி நானுாறு ஏடு ஒன்றில்மட்டும் கண்ட தும்பை என்ற பாடத்தைமட்டும் மேற்கொள்வதும், அதையே உண்மை யெனக்கொண்டு, அந்தச் சொல், தொண்டைநாட்டில் உள்ள ஒர் ஊரின் பெயரோடு ஒற்றுமை உடையதாக உளது என்ற ஒரே காரணம் காட்டி, வேறு நல்ல சான்று எதுவும் காட்டாமலே, அவர் அவ்வூரினர் எனக் கூறுவ தும் பொருந்தாது.

நமக்குக் கிடைத்த இவர் பாடல்கள் ஆறு ; புறத்தில் ஒன்று நற்றிணையில் ஒன்று ; குறுந்தொகையில் நான்கு ; இவர் பாடல்கள் அனேத்தும் எவர் பெயரையும் குறிப் பிடாமல் பொதுவாகவே அமைந்துவிட்டமையால், இவர் வரலாறு எதையும் அறிந்துகொள்வதற்கு இயலாது போயிற்று.

கணவனே இழந்தமகளிர் அவன் நடுகல் முன்இடத்தை மெழுகித் தாய்மைசெய்து வழிபடும் வழக்காற்றினே அடிப் படையாகக்கொண்டு பாடிய புறநானூற்றுப் பாட்டில், தன் கண்ணிரையே.ாேகக்கொண்டு மெழுகுவாள்,