பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 உவமையாற் பெயர்பெற்ருேர்

'மெழுகும் ஆப்பிதன் கண்கலுழ் நீரான்”

என்று கூறும் பகுதி, கணவனே இழந்த மகளிர்கம் கடுங் , துயர்க்காட்சியினை நம் கண்முன்கொண்டு நிறுத்துவ தாகும்.

இற்செறிக்கப்பட்ட தலைமகள் ஒருத்தி, தம்பி யொன்றை நோக்கி, மலர்தோறும்சென்று மதுவைத் தேடி அலையும் ஏ மணிச்சிறைத் தும்பி இங்கே இவ்வாறு அலைவதைவிடுத்து எம் தலைவர் நாட்டிற்குச் செல் , அவர் நாடு வளத்திற் சிறந்தது; அங்காட்டு மலைகளில் வரிசை வரிசையாகத் தேனடைகள் தொங்கும் ; ஆகவே ஆங்குச் சென்றால் கவலையின்றி வாழ்வை ; ஆங்குச் சென்றபின்னர், இத்துணையும் கூறிய எனக்காக ஒன்றுசெய்ய வேண்டு கிறேன் ; நீ செய்யப்போவது கெடுதி யுடையதன்று : நல்லதொன்றையே செய்யச் சொல்கிறேன் ; நல்லதுசெய்ய நீ அஞ்சவேண்டியதில்லை; ஆண்டுச்சென்றால், அவரைக் கண்டு, ' நம் காதலி இன்னும் இற்செறிக்கப்பட்டுளாள் ; அவள் சுற்றத்தார் உழைத்துப்பெற்ற பொருளும் வலியும் உடைய உயர்ந்தோராவர் ; ஆதலின் அவர்களறியாது அவளே அடைதல் அரிது ; முறைப்படி சேரின், வரவேற்று விரும்புவ அளிக்கும் அருள் உள்ளம் உடையராவர் என்று கூறுக’ என்று பாடிய பாடற்பொருளும்,

தான்் அவ்வாறு வேண்டவும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், வேலியிற் படர்ந்திருக்கும் கொடிகளில் மலர்ந்து மணக்கும் பீர்க்கம்பூவில் உள்ள கேனேக் தேடிச் சென்றும், தன் இனிய ப்ெடையுள்ள இடம் நோக்கிச் சென்று கூடி மகிழ்ந்தும் காலம் கடத்தும் தும்பியைச் சினத்துநோக்கி, ஏ. தும்பி கின் உடல்தான்் கரிது என்று எண்ணினேன் ; கின் அறிவும் கரிது என்பதை அறியாதுபோயினேன் ; கொடுமை உள்ளம் படைத்த கின்னிடத்தில் என் குறையினைக் கூறிய காரணத்தின லேயே இந்நோய் முன்னினும்பெருகித் துயர் செய்வ தாயிற்று” என்று கூறும் நற்றிணைப் பகுதியும்,